பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


188 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


நேரத்திற்கு முன்னதாகவே அதாவது அரை வயிறு நிறைவது போல சாப்பிட்டு விடவேண்டும். அவ்வாறு உண்ணுகின்ற உணவு, உங்களுக்குப் பழக்கப்பட்ட தினந் தோறும் நீங்கள் ருசித்துச் சாப்பிடுகின்ற உணவாக இருப்பது நல்லது.


புதிதாக பழக்கமில்லாத உணவு வகைகளை உட்கொள்ளவே கூடாது.


இரண்டு நாள் போட்டி இருக்கிறது என்றால் என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.


முதல் நாள், முன்பு கூறியது போல செய்து கொள்ளுங்கள். அன்று இரவு, அதாவது போட்டி நடந்து முடிந்த முதல் நாள் இரவில், அதிகமாக உணவைச் சாப்பிடக் கூடாது.அவ்வாறு சாப்பிட்டால், என்ன ஆகும் என்று கேட்கலாம். அதிகமாக உண்ட உணவை ஜீரணிப் பதற்காக இரத்தம் முழுமையும் வயிற்றுக்குப் போய் விடுவதால், களைத்த தசைகளுக்கும், தசை நார் களுக்கும் தேவையான இரத்தம் கிடைக்காமற் போய் விடும். அதனால் களைப்பு அதிகமாகி, மறுநாள் போட்டி யில் கலந்து கொள்ள கஷ்டமாக இருக்கும்.


எண்ணெய் பசையுள்ள உணவு எளிதாக ஜீரண மாகாது. வறுத்த மாமிசம், பச்சை வெங்காயம், வறுத்த காய்கறிகள், ஐஸ், காபி, டீ, குளிர்ந்த பால், குளிர் பானங்கள் அனைத்தும் அதிக தாகத்தை உண்டுபண்ணும். ஜீரணமாகாத எண்ணெய் பசையுள்ள பொருட்கள் ஜீரணக் கருவிகளை தொந்தரவு செய்து, வாயுவைக் கிளப்பி விட்டு, வயிற்றோட்டத்தையும், வயிற்று பொரு மலையும் உண்டு பண்ணிவிடும். ஆகவே, போட்டிக்கு முன்னே இவைகளைத் தவிர்த்து விட வேண்டும்.