பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 189


ஆகவே, எளிதாக ஜீரணிக்கின்ற உணவான சோறு, தேன் முதலின உண்ணுதல் நல்லது. பால் குடிப்பது நல்லதா என்றால், பாலும் தேவையில்லை. ஏனென்றால் பால் ஜீரணமாவதற்கு அதிக நேரம் பிடிக்கும். ஆகவே, போட்டிக்கு முன் பால் குடிப்பது நல்லதல்ல.


பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற மூன்று தத்து வங்களை மேதைகள் கூறுவார்கள். இம்முறைகளைப் போட்டியாளர்கள் போட்டிக்கு முன் பின்பற்ற வேண்டு வது முக்கியம்.


பசித்திரு என்பது போட்டிக்கு முன்னே பசித்திருப் பதுதான் நல்லது. போட்டியைப் பற்றிய அச்ச உணர்வு, ஆசைநினைவுகள் போன்ற உணர்ச்சிமயமான சூழ்நிலை யில், உணவை ஜீரணிக்கத் தேவையான இரத்த ஒட்டம் அதிகம் வேண்டுமல்லவா! போட்டி பற்றிய சிந்தனையில் லயித்திருப்பதால், பசித்திருப்பது, (அதாவது பட்டினி கிடக்க வேண்டுமென்பது அல்ல, பசிக்கின்றது போல ஒர் உணர்வு இருப்பது) போல வயிறார உணவை உண்பது நல்லது.


தனித்திரு என்பது, போட்டிக்கு முன்னே நண்பர் களுடன் சலசலவென்று பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தால், ஒரே நோக்கமும் சிந்தனையும் சிதறுவதுடன், சக்தி விரயமாவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் அதிக சாதனையை நிகழ்த்த முடியாமற் போய் விடும். எனவே, முடிந்தவரை, உங்கள் மேல் நம்பிக்கை வைத்து வாழ்த்த வருபவரிடமும், நண்பர்களிடமும், அதிகமாகப் பேசாமல், போட்டி நிகழ்ச்சியிலேயே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.