பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 193


1922ம் ஆண்டு பாரிசில் நடந்த போட்டியில் எட்டுக்கும் குறைவான நாடுகளே பங்கு பெற்றாலும், இன்று எண்ணற்ற நாடுகளில், எத்தனையோ வீராங்கனைகள் ஆண்களுக்கு ஈடாக சாதனைகள் செய்து காட்டி வரு கிறார்கள்.


தமிழ் மறக்குலப் பெண்டிரான நீங்களும், தன்னிக ரில்லாதவாறு உடல் தகுதியை வளர்த்து, திறமையைப் பெருக்கி, திக்கெட்டும் சென்று வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கவேண்டும்.


பொருத்தமான விளையாட்டை அறிந்து, திருத்த மான பயிற்சிகளைச் செய்தீர்களேயானால், பெண்கள் இப்போட்டிகளில் ஈடுபடலாமா என்ற அச்சத்தை, ஐயத்தைத் தவிர்த்து, உடலுக்குத் தேவையான எடைப் பயிற்சிகளை செய்தீர்களேயானால், மாதவிடாய், போன்ற இயற்கையமைப்பை பெரிது படுத்தாது. அதுவும் சகஜமான ஒன்றே என்று எண்ணி, இயல்பான வாழ்க்கை முறையிலே விளையாட்டை இணைத்து, முயற்சி செய்வீர்களேயானால், வெற்றி நிச்சயம்.


தமிழ்க்குலப் பெண்களின் தன்னிகரில்லா வீரத்தை புறநானூறும் மற்ற நூல்களும் பெரிதும் வியந்து பாராட்டும். அவர் வழி வந்த உங்களுக்கும் அந்த ஆற்றல் இருக்கிறது. காலம் கருதி, இடம் கருதி வாளா இருந்து விட்டீர்கள். குகை விட்டெழுந்த புலியென கிளம்பி, தடை கடந்து, கடமையை நினைந்து செயல்படுவீர். வெற்றி பெறுவீர்.


வெற்றியும் தோல்வியும் ஒன்றாக ஏற்பது வீரனுக்கு அழகு வாழ்கின்ற நாட்களை வீரமாகக் கழிப்பதே பெற்ற