பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


194 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


பிறவிக்குப் பயனாகும். வீர வாழ்க்கையை, விவேகமும் சுகமும் உள்ள வாழ்க்கையை, விளையாட்டு நிகழ்ச்சிகள் நன்கு அளிக்கின்றன. சிறந்த உடலை நமக்குத் தருகின்றன. சிறந்த உடலில்தான், சிறந்த அறிவு முகிழ்க்கிறது.


சிறந்த உடலுடன், சிறந்த அறிவைப் பெற்று, சீர் மிகுந்த புகழையும் நீங்கள் பெற வேண்டாமா? பெற்ற தாயும் தந்தையும் பிறந்த பொன்னாடும் உங்களைப் போற்றிப் புகழ வேண்டாமா?


உங்கள் கையிலே உங்கள் எதிர்காலம் இருக்கிறது. உணருங்கள். உய்யும் வழியை நாடுங்கள். வீரப் பெரு மக்களே! ஒன்று கூடுங்கள். செயல்படுங்கள். ஒலிம்பிக் வீரராக வாருங்கள், வெற்றிச் செய்தியைக் கூறுங்கள். வாகை சூடி தங்கப் பதக்கங்களைத் தாருங்கள். எங்கள் நோக்கமும் உங்கள் நோக்கமும் ஒன்றே ஊக்கத்துடன்.


பாடுபடுங்கள்!


பயனடையுங்கள்!


வாழ்ந்து காட்டுங்கள்!


வரலாறு படையுங்கள்!


வெல்க உங்கள் முயற்சி.