பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 199


தேசிய விருது பெற்ற நூலாசிரியர், பல்கலைப் பேரறிஞர் டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்களைப் பற்றி


தினமணி நாளிதழ்


விளையாட்டு, உடல் நலம், உடற்பயிற்சி, உடற் கல்வி, யோகாசனம், மனநலம் குறித்த ஆய்வு நூல்களை இவர் எழுதியுள்ளார்.


முதன்முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.


விளையாட்டக் களஞ்சியம் மாத இதழ் 1977 முதல் வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார் விளையாட்டு இசைப் பாடல்கள் என்னும் ஒலி நாடாவை1978-ஆம் ஆண்டு வெளியிட்டார்.


விளையாட்டுக்களின் பெருமையை உணர்த்தும் வகையில் “ஒட்டப் பந்தயம்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதன் கதை, வசனம், பாடல்கள், இசை, பின்னணிக்குரல், நடிப்பு, தயாரிப்பு முதலிய பொறுப்புக் களையும் ஏற்று திரையிட்டார்.


உடற்கல்வித் துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு தமிழ்நாடு அளவிலே “உடற்கல்வி கலைமாமணி” என்ற விருதையும், ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்து விளங்கும் உடற்கல்வி ஆசிரியப் பெருமக்களுக்கு “உடற்கல்வி ஜீவ ஜோதி” என்ற விருதையும் வாங்கிப் பாராட்டி வந்தார்.