பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 19


B g


முதலிய ஐந்துப் போட்டிகள் நடக்கும் என்று சரித்திரம் கூறுகிறது.


ஒலிம்பிக் பந்தயங்களிலே உடல் ஆண்மைக்கும் வீரத்திற்குமே முதலிடம் கிடைத்தது.ஆண்மை மலர்ந்தது.


அனைவரின் வாழ்வும் மலர்ந்தது. அன்று விளையாட்டு


விழாக்கோலத்தால் நாடே மகிழ்ந்தது.இன்று அவர்களை சரித்திரம் புகழ்கிறது. ஒலிம்பிக் பந்தயங்கள் என்று தொடங்கின?


யாராலும் அறிய முடியாத ஒன்று. ஆனால் ஒலிம்பிக் பந்தயத்தின் முறையான வரலாறு கி.மு. 776 லிருந்துதான் தொடர்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒலிம்பிக்பந்தயம் 292 முறை நடைபெற்றிருக்கிறது.293வது பந்தயம் நடைபெறப் போகும் போது தான் கிறித்துவ முதலாம் சக்கரவர்த்தி தியோடாசியஸ் என்பவரால் தடை செய்யப்பட்டது. அத்துடன் ஒலிம்பிக் பந்தய வரலாறே தொடர முடியாமற் போய்விட்டது. 15 நூற்றாண்டுகள் வினே கழிந்தன.


புதிய ஒலிம்பிக் எப்பொழுது தொடங்கியது? யார் தொடங்கினார்?


பிரெஞ்சு நாட்டு பிரபு திரு. பியரி கூபர்ட்டின் என்பவரே புதிய ஒலிம்பிக் பந்தயங்களை 1896ம் ஆண்டு தொடங்கினார். இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் அவர் பயணம் செல்ல நேர்ந்தபோது, அங்குள்ள இளை ஞர்களுக்கு விளையாட்டுக்களில் இருந்த ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கண்டு வியந்தார்.


1889ம் ஆண்டு, தனது தாயகமான பிரெஞ்சு நாட்டிலே விளையாட்டுக்களில் ஆர்வத்தை வளர்க்க