பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா D 23


காற்றுள்ள போதே துற்றிக் கொள் என்பது போல, இளமை இருக்கும்போதே ஏற்றமிகு காரியங்களை செய்துவிடவேண்டும். உடல் அழகிலும், ஆண்மையிலும், வர்ச்சியிலும் உள்ளம் களித்து நின்ற உலக தத்துவஞானி ாக்ரடீஸ் என்ன சொன்னார் தெரியுமா?


“ஒவ்வொரு குடி மகனுடைய கடமையும் தன்னு லை தகுதியான வளமான நிலையிலே வைத்திருப்பது தான். தாய் நாட்டுக்காகப் பணியாற்ற எந்த நேரத்திலும் தயாராக இருக்க, தன்னை சிறந்த முறையில் காத்துக் கொண்டிருக்கவேண்டும்.”


‘தன்னுடைய உடல் அழகையும், ஆண்மையையும் வலிமையையும், முழுத் திறமையையும் இளமை காலத் திலே உணர்ந்து கொள்ளாமல், ஒருவன் சோம்பித் திரிந்து முதுமை பெற்று மடிவது எவ்வளவு கேவலமான செயல்?”


வாழ்வில் ஒரு முறையே வந்து போகும் உங்கள் இளமையைப் பயன்படுத்துங்கள். வலிமை ஏற்றுங்கள். விட்டுக்கும் நாட்டுக்கும் பயன்பட வாழுங்கள். ஒலிம்பிக் வியராக வர உழையுங்கள். உங்களை நாடே போற்றும். பிறந்த பயனைப் பெற்ற பெருமை உங்களைச் சேரும்.


பள்ளிகளில் நடக்கும் பந்தயங்களில் கலந்து கொள்ளுங்கள். ஆறு தொடங்கி, நதியாக மாறி கடலுடன் கலப்பது போல, பள்ளியில் தொடங்கி, பல பொதுப் பந்தயங்களில் பயிற்சி பெற்று, வட்ட அளவில் நடக்கும் போட்டிகள், மாவட்டப் போட்டிகள், கல்லூரிப் போட்டிகள், மாநிலப் போட்டிகள், இந்திய ஒலிம்பிப் போட்டிகள் இப்படியாக வளர்ந்து இறுதியில் இந்திய நாட்டின் பிரதிநிதியாக உலக அரங்கிற்குச் சென்று வெற்றித் திலகம் பூண்டு, தங்கப் பதக்கங்களை வென்று