பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


வாருங்கள் என்று வாழ்த்தவே தான், “நீங்களும் ஒலிம்பிக் வீரர் ஆகலாம்” என்று கூறினேன் - “வெல்க உங்கள் முயற்சி” என்று கூறி, விளையாட்டு நிகழ்ச்சிகளை (Athletic Events) எவ்வாறு பயில்வது, பழகுவது போன்ற திறன் நுணுக்கங்களை விளக்குகிறேன்.


அக்காலத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏன் முக்கியத்துவம் கிடைத்தது?


நாடுகாக்கும் படைவீரர்கள் பீடும் பெருமையும் பெற்றிருப்பதோடு, வலிவும் வனப்பும் பெற்று விளங்குவது மிக அவசியம் என்று நாடுகாத்த நல்லவர்கள் எண்ணினர். தமிழ்நாட்டு மன்னர்கள் குதிரையேற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வில்வித்தை முதலானவைகளில் தேர்ச்சியுற்ற வீரர்களைத் தகுந்த மரியாதை தந்து காத்ததுபோல, பழங்கால பெர்சியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் தங்கள் படையின் பலத்தையும் ஆற்றலையும் பெருக்க, விளையாட்டுக்களைப் பயன்படுத்தினர்.


அதிலே ஒட்டங்கள் தான் மிக முக்கியமானவை யாகும். பாடப் பாட ராகம், மூட மூட ரோகம்’ என்ற பழமொழி போல, ஒட ஓட வேகம் என்று படை வீரர் களை ஒட விட்டனர். ஒடிய வீரர்கள் உடல் உரம் (Strength), நெஞ்சுரம் (Stamina) நிறைய பெற்றனர். தனிப் பட்ட வீரர்கள் தங்களை உயர்த்திக் கொண்டதோடு, தங்கள் படையின் ஆற்றலையும் உயர்த்தினார்கள். அவர் கள் ஒடிய ஒட்டப்பந்தயங்களே முடிவில் விளையாட்டுப் பந்தயங்களாக மாறின. முடிவில் ஒலிம்பிக் பந்தயங் களாக மாறின.அன்று வீரர்கள் ஒடினர் பகையைத் தேடி இன்று எல்லோரும் ஒடுகின்றனர் புகழைத் தேடி