பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


யாட்டுக்களையே பயன்படுத்தி ஒரு சிலர் பணம் சம் பாதிக்கத் தொடங்கி விடுவார்கள்.


இவர்களுடைய நிகழ்ச்சிகளை பணம் கட்டித்தான் பார்க்க முடியும். நிகழ்ச்சியை நடத்துகின்றவர்கள் அவர்களுக்குப் பணம் கொடுப்பார்கள்.ஆகவே, வியாபார நோக்கத்தோடு, வருமானம் கருதி விளையாட்டுக்களிலே ஈடுபடுவோர் வணிகமுறை விளையாட்டுக்காரர்களாகி


விடுகின்றனர்.


எல்லோரும் விளையாட்டு வீரர்கள் ஆகிவிட


முடியுமா?


முடியும், கூன், குருடு, பிறவி நோயாளர்கள் இவர் களைத் தவிர, நலமான, நிறைவான உடலமைப்பு உள்ள


அத்தனை பேருமே வீரர்கள் ஆகிவிட முடியும்.


சிலர் வீரர்களாகவே பிறக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையான வீரர்கள் உண்டாக்கப்படுகின் றார்கள்.


வீரர்கள் ஆக்கப்படுவதற்குரிய காரணம் - வீரர் களின் பயிற்சியும் முயற்சியும்தான். ஊக்கமும் நோக்கமும் தான். முனைப்பும் உழைப்பும்தான். ‘பாடுபட்டால் பலனுண்டு என்ற பழமொழி இதற்குத்தான் சரியான மொழியாகும். பாடுபட்டவர்கள் நாடு போற்ற வாழ்ந்த வரலாறு பல உண்டு.


முயற்சியால் முன்னுக்கு வந்தவர்களில் ஒரு


சிலரைப்பற்றி உங்களால் கூறமுடியுமா?...


நிறைய சான்றுகளைத் தர முடியும். பிறப்பிலே


விளையாட்டுவீரர்களாகப் பிறந்தோரைவிட, மயற்சியால்