பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 27


முன்னுக்கு வந்தவர்களே அதிகம். ஒரு சிலரின் உன்னத முயற்சியைக் காட்டினால், உங்களுக்கு நன்றாகப் புரியும்.


1960ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி களில், 100 மீட்டர், 200 மீட்டர், ஒட்டங்களில் தங்கப் பதக்கமும், 4x100 மீட்டர் தொடரோட்டப் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்ற அமெரிக்க நீக்ரோபெண் வில்மா ருடால்ப்”, 19 குழந்தைகளுக்கிடையே 17 வது குழந்தை யாகப் பிறந்தவள். பிறந்தபோது அவள் எடை 4% பவுண்டே தான் இருப்பாளா இறப்பாளா என்ற ஐயம். விட்டிலே வறுமை. அவளுக்கோ நோயின் கொடுமை. புள் நிமோனியா என்ற விஷக் காய்ச்சல் விளைத்த கொடுமையால் இளம் பிள்ளை வாதம் வர, கால்கள் ()ாண்டும் செயலற்றுப் போயின. தாயின் சலியாத முைப்பால் பிழைத்தாள். எட்டு வயதான போது கட்டை பான்றி கைகளால் தாங்கி நடந்தாள். 11 வயது வரை அதற்கான இரும்புக் காலணி ஒன்றின் உதவியால் | ந்தாள். 13வது வயதில்தான் எல்லோரையும் போல் இயல்பாக நடக்கத் தொடங்கினாள். அந்தப் பெண் தான், தன்னுடைய 20ம் வயதில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதோடல்லாமல், சிறந்த சாதனைகளையும் (Records) ஏற்படுத்தினாள்.


ராய் எவ்ரி (Roy Ewry) என்பவரும் இதே போல்தான் இளம்பிள்ளை வாதத்தால் எழுந்துகூட நிற்க முடியாமல் படுக்கையிலே கிடந்தார். மருத்துவர்களும் தங்களால் முடியாதென்று கைவிட்டு விட்டனர்.ராய் தன்னம்பிக்கை இழக்காமல், தானே எழுந்து நிற்கப் பழகினார்.நடந்தார். ஓடினார். கால்களுக்குப் பலம் வருவதற்காக உடற்பயிற்சி களைச் செய்தார். பலம் பெற்றார். அதே முயற்சி தான்