பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 [T] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


மேற்கூறிய மூன்று முறைகளிலும் போட்டிகள் நடக்கும். இம்மூன்று முறைகளைப் பின்பற்றியேதான் போட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.


மேற்கூறிய போட்டிகளில் பெண்கள் பங்கு பெறலாமா?...


பங்குபெற வேண்டும் என்பது தான் நோக்கம், முகத்திலே உள்ள இரு கண்களில் ஒன்று மட்டும் பார்த் தால் உருப்படியாகப் பார்க்க முடியாது. குறைதானே அது. நிறைவான சமுதாயத்தை நிறுவ நினைக்கும் போது சரி பாதியாக இருக்கும் பெண் இனத்தை நீக்குதல், நீக்க நினைத்தல் தவறல்லவா!


பழைய ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்பது மட்டுமல்ல, பார்வையாளர் கவும் வரக் கூடாது என்பது சட்டமாகவே இருந்தது. அதை மீறியவர்கள், மரண தண்டனையும் பெற்றார்கள்.


ஆனால், புதிய ஒலிம்பிக் தோன்றிய 25 ஆண்டு களுக்குள்ளே புது எழுச்சி, மறுமலர்ச்சியாகப் பொங்கி எழுந்தது. பிரெஞ்சு நாட்டிலே தீவிரமாக எழுந்த இப் பிரச்சனை, வீறு கொண்டெழுந்தது. வெற்றியடைந்தது. 1922ம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கானப் போட்டிகளும் நடைபெற்றன. எட்டுக்கும் குறைவான நாடுகளே பங்கு பற்றினாலும், எடுத்த காரியம் வெற்றி பெற்றதல்லவா..?


கொள்கையளவிலே வெற்றி பெற்று.போட்டிகளம் புகுந்த பெண்கள், குறுகிய காலத்திற்குள்ளேயே அதிக சாதனைகளை செய்து காட்டத் தொடங்கினர். 1968ம் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்