பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


பெண்களை ஒடுக்கின. இனி நம்மால் ஆண்கள் போல் வாழ முடியாது என்ற எண்ணம் ஒங்கவே, உள்ளம் ஒடுங்கியது போல, உடலும் ஒடுங்கியது. நல்ல கட்டு மஸ்தான உட்லோடு ஆண்கள் மட்டும் வளர, பெண்கள் கூனிக் குறுகி நிற்கக் கூடிய சமுதாய நிலை, சுற்றுப்புற சூழ்நிலையாக வளர்ந்த காலம், இன்று மாறியது.


அன்று பெற்றதாழ்வு மனப்பான்மை, தாய்மார் களை இன்னும் தனித்து வைத்துக் கொண்டிருக்கிறது. அன்று காட்டிலும் மேட்டிலும் வேட்டையாடித் திரிந்து குடும்பத்தைக் காத்தத் தாய்க்குலம், இன்று தாழ்வு மனப்பான்மை காரணமாக உடலால் குறுகிக் கிடக்கிறது. புழக்கத்தில் இருக்கும் பொருட்கள் பொலிவும் வலிவும் பெறுவது போல, புது வழக்கத்தில் தாய்மார்கள் விளையாட்டுத் துறையில் இறங்குவார்களேயானால் ஏற்றமுள்ள உடல் அமைப்பு பெருகும். அதனால் மாதர் சமுதாயம் இன்னும் எழுச்சிபெறும் போட்டியில் கலந்து கொள்ள, பெண்கள் என்ன செய்ய வேண்டும்?


முதலில் தங்களுடைய தாழ்வு மனப்பான்மையை அகற்றிவிட வேண்டும். தங்களாலும் பெரிய சாதனை களை செய்து காட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். பல நாட்டிலும் உள்ள சிறந்த வீராங்கனைகளை நன்கு பரிசோதித்த மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள், “பெண்களும் போட்டியில் கலந்து கொள்ள லாம். எந்தவிதமான இடையூறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பே இல்லை. போட்டிக்குத் தேவை அந்தந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கேற்ற திறமை, முயற்சி, உடல் பலம், உடல் நெகிழ்ச்சியே தவிர வேறு எதுவும் தேவை