பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [...] 37


தில்லை. மென்மையான பாகங்களை உறுதியாகவும், வலி வாகவும், வனப்புடனும் வைத்துக்கொள்ள எடைப் பயிற்சிகளைச் செய்க.


ஆண்களைப் போல பெண்களாலும் உடலாண்மை நிகழ்ச்சிகளில் கலந்து கெள்ள முடியுமா?


சந்தேகமே வேண்டாம். நிச்சயமாக முடியும். மாரதான் ஒட்டப் பந்தயம் (Marathon Race) என்பது 26. மைல் 385 கெஜ தூரம் உள்ளது.அதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். பெண்களுக்கான நெடுந்துர ஒட்டம் என்பது 800 மீட்டர்தான். ஆனால், போஸ்டன் என்னும் நகரில் நடந்த ஒரு மாரதான் போட்டியில் 900 பேர் கலந்து கொண்டனர். அதிலே ஒரு அமெரிக்கப் பெண்ணும் கலந்து கொண்டதை அமெரிக்க அதிகாரிகள் கவனிக்கவில்லை. அந்தப் பெண் அந்த நீண்ட தூரத்தை மற்ற ஆண்களைப் போலவே எந்தவிதமான இடையூறு மின்றி. ஓடிவந்து முடித்திருக்கிறாள். இது 1968ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி, ஆகவே, தேகசக்தியும் மனவலிமையும் பரிபூரணமாகப் பெண்களுக்கு உண்டு.


இந்த நம்பிக்கையுடன் செயல்படுங்கள். இப் பொழுது ஒலிம்பிக் பந்தயங்களில் மாரதான் ஒட்டப் பந்தயம் பெண்கள் நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 5கோடி மக்களுக்கு மேலுள்ள தாய்குலம், தாய்மையால், தூய்மையால், வாய்மையால் பெருமை பெற்றது போல விளையாட்டுத் துறையிலும் ஈடு இணையில்லாமல் விளங்க வேண்டும். வெற்றியைத் தேடித்தரவேண்டும்.


நம் நாட்டு சரித்திர நாயகிகளின் வரலாற்றைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. மேல்நாட்டாரும்