பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 [...] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


தலை வணங்கி ஏற்றுக் கொள்ளக்கூடிய தலையாய வீரம் ஆற்றல் எல்லாம் பெற்றுவிளங்கியுள்ளவர்கள். அவர் களின் வழி வந்த நீங்கள், ஆற்றல் மிக்கவர்களாக விளங்க வேண்டும், அவனி போற்ற உழைக்க வேண்டும். வரப் போகும் ஒலிம்பிக் போட்டிகளில், பாரதப் பெண்கள் வருகிறார்கள் என்றால்.போட்டிக்கு வரும் அயல்நாட்டுப் பெண்கள் கூட அச்சத்துடன் விலக வேண்டும் என்ற உச்ச நிலைக்கு உன்னத நிலைக்கு வர வேண்டும் என்பது என் அவா. உழைப்பில் வாரா உறுதிகள் உளவோ.


இனி உடலாண்மைப் போட்டி நிகழ்ச்சிகளைப் பற்றிய முறைகளைக் கூறுவோம்.


1. ஒடும் போட்டிகள் (Running Events)


ஓடும் போட்டிகள் எத்தனை வகைப்படும்?


ஒடும் போட்டிகளைப் பந்தயங்களில் பல வகை களாகப் பிரிக்கிறார்கள். ஒட்டம் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், ஒன்றுக்கொன்று சிறிது மாறுபட்டு இருப்பதோடு, திறன் நுணுக்கங்களிலும் (Techniques) வேறுபட்டு இருப்பதால், நமக்கு வசதியாகவும் எளிதாக வும் இருக்க 5வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.


1.விரைவோட்டம் (Sprint) 2.இடைநில்ை ஒட்டம் (Middle distance)


3.நெட்டோட்டம் (Long distance)


+:


ஆசிரியரின் “நீங்களும் உடலழகு பெறலாம்” என்ற புத்தகத்தில் பெண்களுக்கான உடலழகுப் பயிற்சிகள் உள்ளன. படித்து, அறிந்து, செய்து, பயன் பெறுக.