பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 39


4. தடை தாண்டி ஒட்டம் (Hurdles) 5. தொடரோட்டம் (Relay Race)


1.6%lsos ($6,ILLlo (Sprint) விரைவோட்டம் என்றால் என்ன? அதில் பங்கு பெறுவோருக்கு வேண்டிய தகுதி, பயிற்சி முறை, திறன் நுணுக்கங்கள் முதலியவற்றை விளக்கவும்.


ஒட்டக்காரன் ஒருவன், தன் கால்களை மடக்கி உட்கார்ந்த நிலையில் நின்று, (இருந்து) உணர்ச்சிகரமான உச்ச நிலையில் ஒட்டத்தைத் தொடங்கி, தான் சென் றடையும் எல்லை வரை முழு மூச்சுடன் வேகமாக ஒடி முடிப்பதையே விரைவோட்டம் என்று கூறுகிறோம்.


50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தூரங்கள் எல்லாம் விரைவோட்டத்திற்குட்பட்டவைகளே.


தகுதி: விரைவாக நினைத்த மாத்திரத்தில் இயங்கக் கூடிய தசை அமைப்பு பந்தயக் குதிரைபோல துடித்துத் துள்ளி நிற்கின்ற உடல் வாகு. உடலையும் தசைகளையும் ஒருநிலைப்படுத்தி இயக்கி செயலாற்றக் கூடிய சிறந்த மனநிலை உள்ளவர்களே 50 மீட்டர், 100 மீட்டர் 200 மீட்டர் ஒடும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.


இதேபோன்ற உடல்நிலை, மனநிலை உள்ளவர்கள், இன்னும் தன்னை அதிக உழைப்புக்கு ஆட்படுத்தத் தயங்காத பண்புள்ளவர்கள், உழைக்க உடலுரமும் சகிப்புத்தன்மையும் நிறைந்தவர்கள், அத்துடன் விரைவாக ஒடக்கூடிய நெஞ்சுரம் (Stamina) கொண்டவர்கள் 400 மீட்டர் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஏனென்றால், 400 மீட்டர் ஒட்டத்தை “மனிதரைக் கலங்கடிக்கும் 53948” (Man killing event) GTGrli. 9;&Gou -91804