பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


நெஞ்சுரமும் உடலுரமும் கொண்டவர்களே இதில் பங்கு பெறலாம். முன்னர் 400 மீட்டர் தூர ஓட்டத்தை ‘இடைநிலை ஒட்டம்’ என்று கூறியவர்களும் உண்டு. ஆனால் தற்போது, ஒட்டக்காரர்கள் அனைவரும் கொண் டுள்ள பயிற்சியினால் விரைவோட்டம் போலவே ஒடு கின்றனர்.


உடல் வாகு என்றால் என்ன என்று கேட்கலாம். அதாவது உடலமைப்பு. உடல் ஒல்லியாகவோ, உயர மாகவோ, குட்டையாகவோ, எடை அதிகமாகவோ இருக் கலாம். ஆனால் நினைத்ததை செயல்படுத்தக் கூடிய சீரிய பண்பு, நரம்பு மண்டலமும் தசை மண்டலமும் ஒருங் கிணைந்து பணியாற்றக்கூடிய உடலாற்றல் உள்ளவனே வெற்றி வீரனாக முடியும்.


இதிலே பங்கு பெறுவோர் கவனிக்க வேண்டியவை - தளர்ச்சியடையாமல் எல்லை இறுதிவரை முழு மூச்சுடன் ஒடுவதுதான்.'ஓடவிடும் ஒலி’யைக் (Startinggun) கூர்ந்து கேட்கும் ஆற்றல்; மனதை பல இடங்களில் ஒடவிடாது ஒரே குறிக்கோளுடன் வைத்து இருக்கின்ற மன உறுதி; ஒலி கேட்ட உடனேயே முயலைப் போல் பாய்ந்து கிளம்பும் சக்தி. 1/100 பங்கு தாமதமானாலும் கூட இறுதியிலே தான் ஒட வேண்டியிருக்கும் என்ற அளவுக்கு விரைவோட்டப் போட்டிகள் இருப்பதால், விரைந்தோடக் கூடிய வீறு கொண்ட தசைப் பகுதிகள் உடையவர்களே இப்போட்டியில் கலந்து கொள்ள முயற்சிக்கலாம்.


விரைவோட்டம் தொடங்கி முடிவதை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:-தொடக்கம், தொடர்ச்சி, முடிவு.