பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


தொடக்கம்: (Start) விரைவோட்டத்திற்குத் தொடக் கம்தான் ஜீவநாடி கண் மூடிக் கண் திறப்பதற்குள் போட்டி தொடங்கி முடிந்து விடும். ஆதலால், ஒலி கேட்ட உடனேயே ஒடத் தொடங்கும் உயர்ந்த ஆற்றல் வேண்டும். பாயப் போகின்ற புலி பதுங்கியிருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அது போலவே தான் ஒடத் தொடங்கும் ஒருவர் நிற்கும் நிலையும். (படம் காண்க)


தன் கைகள் இரண்டையும் கோட்டிலே தோள் அளவு அகலம் வைத்து விரைவாக ஒடத் தொடங்குகிற வகையில் குதிகாலில் உட்கார்ந்து, ஒலி கேட்ட உடன் ஒடத் தொடங்க வேண்டும், அவ்வாறு ஒடத் தொடங்கும் முறையில் மூன்று வகையாக உட்காரும் நிலை (Sitting Position) go 6&T(5).


(A) முன்னிலை தொடக்கம் : (Bunch Start). பலமான கால்களும், குள்ள உடலமைப்பு உள்ளவர்களும் இம்