பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [o] 45


தயாராயிருங்கள் (Set) என்ற மறு உத்தரவு கிடைத் ததும், காலில் ஏற்றியிருந்த உடல் எடை முழுவதையும் கைகளுக்கு வருவதுபோல் உடலை முன்புறம்தள்ளி, பின் புற முழங்காலையும் இடுப்புப் பகுதியையும் தோள் அளவுக்கு உயர்த்தி, நேரே தெரியும் நேர்க் கோட்ட ளவுக்குத் தலையை நிமிர்த்தி, ஆடாமல் அசையாமல் நிற்கவும்.


இந்நிலையில் ஒரு சில குறிப்புக்களை கவனிக்கவும். லின் முழு எடையையும் கைகளே தாங்கி இருக் ன்ெறன. இன்னும் கொஞ்சம் உடலை முன்பக்கமாகக்


கொண்டு வந்துவிட்டால் கீழே விழுந்துவிட நேரிடும்.


தலையை நேரே நிமிர்த்திப் பார்த்தல் என்றால், ‘ஒடுகின்ற எல்லை முழுவதையும் பார்க்கக் கூடாது. முன்று அல்லது நான்கு மீட்டர் தூரமுள்ள ஒடும் பாதையை மட்டுமே பார்க்க வேண்டும்” என்பதுதான்.


எந்த நிலையில் நின்றால் வசதியாக இருக்குமோ, அதைப் பழகிக் கொண்டவாறு நிற்க வேண்டும் (Comfort).


ஒடுவதற்கு முன்நெஞ்சிலே படபடப்பு, குறு குறுப்பு, பதட்டம், இனம் தெரியாத ஒரு பதை பதைப்பு, ஏக்கம் எல்லாமே சூழ்ந்திருக்கும். அதையெல்லாம் அகற்றி விட்டு, சாதாரண நிலையிலே உடல் ஆடாதவாறு, நடுங்காத வாறு, தன்னம்பிக்கையோடு நின்றிருக்க வேண்டும்.


இவ்வாறு தயாராக நிற்கையில் ஒலி கிளம்பும். அந்த ஒலி விசிலால் அல்லது துப்பாக்கியால் எழலாம். அவ்வாறு ஒலி எழுந்தவுடன், வில்லில் இருந்து அம்பு புறப்படுவதுபோல,அணையை உடைத்துக்கொண்டு புது வெள்ளம் பீறிட்டுக் கிளம்புதல் போல, பின் காலால்