பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை


உடல் என்பது அழகானது மட்டுமல்ல. வலிமை யானது. புதுமை நிறைந்தது. திறமை மிகுந்ததும் ஆகும்.


நமது உடலுக்கு உள்ள வலிமை என்ன, திறமை என்ன, புதுமை என்ன என்று தெரிந்து கொள்ளாமல், முயன்றுகூட பார்க்காமல், நாம் கிழடாகிப் போய் விடுவது என்பது, மிகவும் கேவலமான வாழ்வாகும்.


நமது உடலை அளந்து பார்ப்பது போல, திறமை


களையும் அளந்து, சோதித்து அறிந்து மகிழ உதவுவது விளையாட்டுக்களாகும்.


உண்பது, உறங்குவது, உறவாடுவது, தளர்ந்து போவது, மருந்து சாப்பிடுவது. இவை தான் வாழ்க்கை யின் வனப்பு என்று நம்மவர்கள் நம்பிக் கொண்டு, ஒரு போலித்தனமான பொய்யான வாழ்வை வாழ்ந்துபோகின் றாாகள.


அதற்கும் மேலே ஒர் ஆரோக்கியமான வாழ்க்கை; ஒர் ஆற்றல் மிகுந்த ஆண்மையுள்ள வாழ்க்கை; ஒர் ஆனந்தமயமான வாழ்க்கை; ஒர் அற்புதமான வாழ்க்கை இருக்கிறது என்பதை, படித்தவர்கள் கூட நினைத்துப் பார்க்காத அளவுக்கு, பாமரத்தனமான, பத்தாம் பசலித் தனமான வாழ்வில் புதையுண்டு கிடக்கின்றார்கள்.