பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


நாம்தானே ஒடி ஆகவேண்டும் உள்ளுக்குள்ளே பயந்து உணர்ச்சி வசப்படுவதால் என்ன லாபம்?


முழுவேகத்துடன் ஒடிக் கொண்டிருக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர, பின்னால் திரும்பிப் பார்ப் பதோ, தைரியமிழப்பதோ கூடாது. இந்தக் குறிப்புக்களை உணர்ந்து கொண்டு பயிற்சிகளை செய்யத் தொடங்க வேண்டும்.


பின்வரும் பயிற்சி முறைகளைத் தொடர்ந்து செய்வது உடல் திறம் பெறுவதற்கும், திறன் நுணுக்கங்கள் வளர்வதற்கும் வாய்ப்பளிக்கும்.


பயிற்சி: விரைவோட்டத்திற்குத் தேவையான வலிமையுள்ள கால்கள், விரைந்து முன்னும் பின்னும் இயங்கக் கூடிய கைகள், சக்தி மிக்கத் தோள்கள், மார்பு, முதுகுப் பின்புறத் தசைகளுடன், உடல் திறமும், நெஞ்சுரமும் வேண்டும். இத்தகைய சக்தியினைப் பெறக் கூடிய பயிற்சிகளையே செய்ய வேண்டும்.


நெடுந்துரம் ஒடி ஒடிப் பழகுதல். ஒரே மூச்சில் ஒடி முடிப்பதல்ல அதன் நோக்கம் 400 மீட்டர் தூரம் ஒடுதல். சிறிது துரம் கைகளை வீசிக்கொண்டு நடத்தல். பின் ஒடுதல்.பின் நடத்தல்.இப்படியாக பல மைல் தூரம் ஒடிப் பயிற்சி செய்தல். வாரத்திற்கு இரண்டு முறை 3 அல்லது 4 மைல் துரம் ஒடுதல்.


நெஞ்சுரம் (Endurance) வேண்டுமல்லவா! முழு மூச்சுடன் 100,200 மீட்டர் துரத்தைக் கடக்க வேண்டுமே! அதற்காக 400 மீட்டருக்கான தூரத்தை பல தடவைகள் ஒடி ஒடிப் பழகவேண்டும். அப்பொழுது பெறுகின்ற ஆற்றல், 200 மீட்டரை எளிதாக ஒடிமுடிக்க உதவும். வாரத்திற்கு இரண்டு முறை ஒடுதல் நல்லது.