பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


போலவே, இன்றும் எல்லோரும் ஒடுவதால் நாமும் அவர்களைப் போல ஒடிப் பழகினால்தான் வெற்றி பெறமுடியும்.


முன்பெல்லாம் இதை ‘இடை நிலை ஒட்டம்’ (Middle distance) என்று கூறினர். ஆனால் இந்நாளில் விரைவோட்டம் போலவே ஒடுகிறார்கள் என்றும் கூறினேன்.நீங்களே ஒடும் நேரத்தைப் பாருங்கள்.


1896ம் ஆண்டு 542 விநாடியிலும், 1948ம் ஆண்டில் 45.9 விநாடியிலும், 1968ல் 43.8லும் ஒடியிருக்கிறார்கள். இப்பொழுது ஒடுகிறவர்கள் ஒவ்வொரு 100 மீட்டரையும் 11 விநாடிகளுக்குள் ஒடுகிறார்கள் என்றால், இதுவும் ஒரு விரைவோட்டம் தானே!


நிறைந்த நெஞ்சுரமும், உடல் திறமும் இருந்தால் தானே தொடர்ந்து 400 மீட்டரையும் முழு மூச்சுடன் ஒட முடியும்? ஆகவே கடினமாக உழைக்கும் விருப்பம் உள்ளவரும், விரைவோட்டக்காரர்களுமே இதில் பங்கு பெறமுடியும். நீண்ட காலடியுடன் ஒடவேண்டி இருப் பதால், அதிக உயரமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இல்லை என்றாலும், அதற்காகக் கவலைப்படவேண்டிய தில்லை.


புதிதாகப் பயிற்சி இல்லாமல் இவ்வோட்டம் ஒடுவோருக்கு, கொஞ்ச தூரம் கடந்ததுமே கால்கள் கனமாகத் தோன்றும். கால்களை யாரோ பின்னுக்கு இழுப்பது போல உணர்வு ஏற்படும். நின்று விடலாமா என்ற நப்பாசை எழும் நெஞ்சு எரிவதுபோல இருக்கும். மூச்சுவிடுவது கூட கடினமாகத் தோன்றும்.


ஆகவே, கால்களும் கைகளும் ஒருங்கிணைத்து செயலாற்றக்கூடிய உணர்ச்சி மிகுந்த உள்ளம், உறுதி