பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா T 55


முனைப்பு இல்லை.நோக்கம் இல்லை. உழைப்பு இல்லை. பக்க ίο இல்லை.


பயிற்சி பெறுவோருக்கோ அக்கறையில்லை. பயிற்சி கொடுப்போருக்கோ ஊக்குவிக்கும் நிலை இல்லை. பக்கத்தோடு பணியாற்றுவாரை போற்றுகின்ற மனப் பண்பாடு இன்னும் நம் நாட்டவருக்கு வரவில்லை, வளாவில்லை.


ஆகவே பயன்படாத இரும்பு துருபிடிப்பது போல, பெரிய ஒட்டக்காரர்கள், விளையாட்டு வீரர்கள் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக, போற்றுதல் இல்லாத தால் வெளிவராமலேயே பின்தங்கி விடுகின்றனர். முன் னேற வேண்டியவர்களின் ஆற்றல் முழுதுமே வீணாகி விடுகின்றது.


ஒரு சிலருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.ஆனால், வந்த வாய்ப்பையும் அவர்கள் சரிவரப் பயன்படுத்துவதில்லை. விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னால் தங்கள் பயிற்சிகளைத் தொடங்குவார்கள்.


போட்டி முடிந்ததும், இவர்கள் உண்டு உறங்குவார் கள் விளையாட்டை விட்டு விட்டு, மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி மறந்தே விடுவார்கள். உடல் திறன் அதனால் பாதிக்கப்படுவதோடு, வளர்ந்து வரும் திறன் பணுக்கங்களும் மங்கிப் போகின்றன என்பதை அவர்கள் | ணர்வதில்லை. பயிற்சி இல்லாத பண்பட்ட உடல், காலக்கிரமத்தில் பாழ்பட்டுப் போகிறது.


ஆகவே, சாதனை புரிய விரும்புவோர், ஆண்டு முழு வதும் இடைவிடாத ஆர்வத்துடன், தொடர்ந்து பயிற்சி