பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 57


செய்ய வேண்டும். உதாரணத்திற்கு ஒன்று: எத்தியோப் பியா எனும் நாட்டிலே சிப்பாயாகப் பணியாற்றிய ‘அபீப் பிலொ’ என்பவர், தன் நாட்டின் ஒரே பிரதிநிதியாகச் சென்று, வெறுங்காலோடு ஒடி ஒலிம்பிக் போட்டியில் ாதான் பந்தயத்தில் வென்றார். இரண்டாவது முறை, திருமணம் ஆனபிறகும் போட்டியில் கலந்து கொண்டு, அதே மாரதான் போட்டியில் புதிய சாதனையை உண் பக்கி வெற்றி வீரராக வந்தார் என்றால், அவர் எடுத்துக் கொண்ட முயற்சியாலும், பயிற்சியாலும் விளைந்த பயன் நான் அது.


பிறர் கூறுவதால் மட்டும் வெற்றி வந்து விடாது.தன் முயற்சி வேண்டும். தானே செய்ய வேண்டும்’ என்ற நினைவுடனே பயிற்சி செய்ய வேண்டும். அந்த நாள் வந்தால் தான், இந்தியா பெருமை பெறும்.


இடைநிலை ஒட்டக்காரர்களுக்குரிய தகுதிகள் எவை?


ஒட்டக்காரர் நல்ல உயரமாக இருப்பது நல்லது. ஆடும் வேகத்தில் அவர் இடுகின்ற காலடிகளின் துரம் (Step) அகலமாக விழுவதால், தூரத்தை விரைவில்


க்கவும், வேகமாகப் போகவும் எளிதாகவும் இருக்கும்.


800 மீட்டர் ஒடுவதற்கு,400 மீட்டர் போட்டிக்கான வேகமும் (Speed), ஒரு மைல் ஒடுவதற்கான நெஞ்சுரமும் (Stamina) z 1 si stpg5)jub (Physical Fitness), 55/T6NI LGuqub, அடுத்தவர்களைக் கண்காணித்து ஒடுகின்ற ஆற்றலும்


தேவை. அடுத்தவரைக் கண்காணிக்கும் ஆற்றல் மட்டும் போதாது அவர்களோடு தன் திறமையையும் ஒப்பிட்டு


அனுசரித்து ஈடு கொடுத்து ஒடுகின்ற மனப்பக்குவம் வேண்டும். ஆகவே திட்டமிடுகின்ற மனம், தெளிவாக