பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


செயல்படுகின்ற உடல்வாகு அத்தனையும் ஒருவருக்கு வேண்டும் சிறந்த தகுதிகளாகும். 800 மீட்டர் ஓட்டத்தை ஒடி முடிக்கும் முறைகளைக்


கூறுங்கள்?


400 மீட்டர் ஒட்டப் பந்தயமாக இருந்தால், ஒரு முறைக்கு, அதிக அளவு 6 பேர் தான் இருப்பார்கள். அவர்களும் அவரவர் பந்தயப் பாதை வழிதான் ஒடி முடிக்க வேண்டும். ஆனால், 800 மீட்டர் பந்தயத்தில், அதிக ஒட்டக்காரர்கள் பங்கு பெறுவார்கள். அவர்களுக் கென்று தனி ஒடும் பாதை’ (Track) கிடையாது. முதல் ஒடும் பாதையில் தான் எல்லோரும் ஒடுவர், ஒடமுயல்வர்.


ஆகவே, ஒட்டம் தொடங்கியவுடனேயே, மூன்றா வது அல்லது நான்காவது ஒடும் பாதையில் ஒடக் கூடாது. அப்படி ஒடினால் அதிக தூரத்தையல்லவா ஒட நேரிடும்! அதனால் அதிக உழைப்பும் அதிக சிரமும் உண்டாகும்.


எனவே, முதலில் உள்ள ஒடும் பாதையில் தான் ஒட வேண்டும்.


முதலில் ஒடுவதா, கடைசியில் ஒடத் தொடங்கி, கடைசி வட்டத்தில் (round) முன்னே ஓடி வந்து விடுவதா என்ற சந்தேகமும் கிளம்பலாம்.


முழு மூச்சுடன் முழு துரத்தையும் கடக்கின்ற வேகமும், ஆற்றலும், நெஞ்சுரமும இருந்தால், ஒட்டம் தொடங்கிய உடனேயே முதலாவதாக ஒடி முதலாவ தாகவே வந்து முடிக்கலாம்.


அந்த மனதைரியமும் ஊக்கமும் இல்லாவிட்டால் தன் முன்னாலே ஒருவரை ஒடவிட்டு, அவர் பின்னா