பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


மேலே கூறிய குறைகளை உணர்ந்து அறவே நீக்கி விடவேண்டும். ஆகவே சக்தியை செலவழிக்காமல் சிக்கனமாக வைத்து, சீராக்கிக் கொண்டு, இயற்கையான வேகத்துடன் ஏற்றவாறு காலடி இட்டு ஓடவேண்டும்.


எவ்வாறு ஒடி முடிக்கவேண்டும் என்று அறிந்து கொள்வது முக்கியமானதாகும். 800 மீட்டர் ஒட்டத்தைப் போலவே, இதற்கும் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள். ஆகவே, ஒட்டத் தொடக்கத்திலேயே அக் கூட்டத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு இடிபடவோ, மிதிபடவோ இல்லாமல் ஒடப் பழக வேண்டும். ஒன்று, முதலாவதாக ஒட வேண்டும். அல்லது 5வது அல்லது 6வது ஒடும் பாதையில் ஒடவேண்டும். பின்னது அதிக தூரத்தையும் சிரமத்தையும் கொடுக்கும்.ஆகவே முதல் ஒடும் பாதையில் முதலாவதாக ஒடமுயல்வது தான் விவேகமாகும்.


முதலாவது இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மூச்சைப் பிடித்துக் கொண்டு முதலிலேயே வேகமாக ஒடி அவதிப்படக் கூடாது.நமக்கு முன்னால் யாராவது வந்து விட்டால் கூட அதற்காக முதல் இடம் இல்லையே என்று கலங்கவோ, கவலைப் படவோ தேவையில்லை. முதலாவதாக ஒடும் ஐந்து பேர்களுக்குள் ஒருவராக ஒடிக்கொண்டிருத்தல் நல்ல வாய்ப்பினை உண்டாக்கும்.


முதலில் போவாருக்கும் தனக்கும் அதிக இடை வெளிதுரத்தை விட்டுவிடக் கூடாது. விட்டுவிட்டால், பின்னால் தொடரமுடியாமல் போய்விடும். முன்னால் செல்கின்றவர் எடுத்து வைக்கின்ற காலடி மேலேயே இரண்டாவதாக செல்வோரின் காலடி இருக்க வேண்டும் என்று கூறுவர்.