பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 65


அதாவது அவ்வளவு நெருக்கம் வேண்டும் என்று அதற்குப் பொருள். மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியில் பிறந்த ஒட்டக்காரரான ரயன் (Ryn) என்பவர், கெய்னோ என்பவரிடம் அதிக இடைவெளி விட்டு ஒடி வந்ததால் தான், இறுதி வட்டத்திலே அவரை மீற முடியாமல், தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார். அனுபவமுள்ள அவர் செய்த தவறு அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும். ஆகவே, இடைவெளி அதிகமில்லாமல் ஒட வேண்டும்.


ஒடுகின்ற 4 வட்டங்களில் (7% அல்லது 8 வட்டங் கள் 200 மீட்டர் பந்தயப்பாதையில்) முதல்வட்டத்திலும் முடிவு வட்டத்திலும் வேகமாக ஒடுவதுதான் சிறப்பானது என்பர். அதற்காக வெற்றி பெறவேண்டும் என்ற உணர்ச்சியால்; உள்ளக் கொதிப்பால், ஆர்வத்தால், அவசரத்தால் அனைவரையும் முந்திக்கொண்டு ஒடி முதல் இடத்தைப்பிடிப்பதற்குள்களைப்படைந்துவிடக்கூடாது. உலகத்தில் சிறந்த ஒட்டக்காரர்கள் அனைவரும் பின்பற்றும் முறை இது தான். முதல் வட்டத்திற்குள் முதலாவது இடத்தைப் பிடித்துக் கொண்டு, இரண் டாவது வட்டத்தில் வேகம் அதிகம் இல்லாவிட்டாலும், தான்பிடித்த முதலிடத்தைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற அளவுக்கு வேகமாக ஒடியும், மூன்றாவது வட்டத்திலே, தனக்குரிய இயல்பான (பழகியுள்ள) வேகத்துடன் சீராக ஒடியும், கடைசி வட்டத்திலே மிகமிகவேகத்துடனும் ஒடி முடிக்கின்றனர்.


ஆக இறுதி வட்டத்தில் எடுப்பான விரைவோட்டம் இருக்க வேண்டும். 7% அல்லது எட்டு வட்டமாக இருந்தாலும் இறுதி வட்டத்திற்கும் இதே முறைதான்.