பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இத்தகைய வேகம் பெறுதற்குரிய பயிற்சி முறைகள் யாவை?


கைகள், முதுகுப்பாகம், கால்கள் எல்லாவற்றிக்கும் உறுதி தரும் எடைப் பயிற்சிகள் தேவை. இருதலைத்தசை, முத்தலைத் தசை (Biceps and Triceps), தொடைத்தசைகள், கெண்டைக்கால்தசைகள் அனைத்தும் வலிவோடு இருக்க வேண்டும். எடைப் பயிற்சிகளைத் தினந்தோறும் செய்க. அதன் பிறகு, ஒடிப் பழகும் முறைகளில் ஒரு மனப்பட்ட, ஊக்கமுள்ள பயிற்சிகள் தேவை. நீச்சல் சிறந்த பயிற்சி யாகும். ஆற்றிலோ, குளத்திலோ, நீச்சல் குளத்திலோ நீண்ட தூரம், நீண்ட நேரம் நீச்சல் அடிப்பது உடல் உறுப்புக்கள் அனைத்துக்கும் சிறந்த பயிற்சியாகும்.


வாரத்திற்கு இரண்டு முறை மூன்று அல்லது 4 மைல் துரத்தை ஒடிப் பழகுதல் நல்ல நெஞ்சுரத்தையும், ஒடும் வேகத்தையும், உடல் திறனையும் கொடுக்கும்.


200 மீட்டர் துரத்தை பல முறை ஒடிப் பழகும் போது, விரைவோட்டத்திற்கான வேகத்தையும் இறுதி வட்டத்தில் ஒடும்போது, நிறைந்த பயனையும் தரும்.


400 மீட்டர் தூரத்தை அடிக்கடி பல முறை ஒடிப் பழக வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கான ஒடும் நேரத் தையும் முடிந்த வரை குறைக்க முயல வேண்டும்.


இவ்வாறு 200, 400 மீட்டர் ஒட்டத்தைப் பழகியது போல, 800 மீட்டர் தூரத்தையும் ஒரே ஒட்டத்தில் முடிப்பதுபோல ஒடிப் பழகவேண்டும்.


ஒவ்வொரு வட்டத்திற்கும் இவ்வளவு நேரம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கணக்கெடுத்துக் கொண்டு ஒடிப் பழக வேண்டும்.