பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா T 5


அப்படி அனைவரும் ஆக வேண்டும் என்பது என் பேராவல்.ஒலிம்பிக் வீரராக நீங்கள் உயர வேண்டும், தமிழ் நாட்டின் பெருமையை, பாரத நாட்டின் பெருமையை பாரில் உயர்த்த வேண்டும் என்ற தணியாத ஆவலுடன், இந்நூலை இளைஞர்களாகிய உங்கள் கையில் ஒப்படைக் கிறேன்.


நல்ல நினைவுகள் நிச்சயம் வெற்றியை நல்கும். ஆனால் அந்த வெற்றி சற்று தாமதமாகத் தான் வரும் என்பதும் எனக்குத் தெரியும்.


அதற்காக, அந்த இனிய வெற்றிக்காக நான் காத்திருக்கிறேன்.இந்த நூலை அழகாக அச்சிட்டு உதவிய கிரேஸ் பிரின்டர்ஸ், ஆக்க வேலைகள் புரிந்த ஆர்.ஆதாம் சாக்ரட்டீஸ்-க்கு என் பாராட்டுக்கள். இந்நூலைப் பயன்படுத்தி முன்னேற இருக்கும் அனைவருக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.


அன்பன் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா டிசம்பர் - 1987 ஞானமலர் இல்லம் சென்னை - 17


எனது தந்தையாரின் விளையாட்டுத்துறை நூல்களை மீண்டும் பதிப்பித்து வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முதல் பதிப்பில் வெளிவந்த ஆசிரியரின் முன்னுரை அப்படியே பிரசுரிக்கப்பட்டுள்ளது.


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறோம்.


சாந்தி சாக்ரட்டீஸ் 12.06.2009 பதிப்பாளர்