பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா D 69


தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டுவதுதான் தகுதி யாகும்.


இவ்வாறு பயிற்சி செய்தவர், பயனைப் பெற்றவர், தங்கப்பதக்கத்தை வென்று, தரணி புகழ் கொண்டவர் “செடோபக் (Zatopek) என்பவர்.இவரை மனித குலத்திலே மாபெரும் சக்தி வய்ந்த மனிதர் என்று உலகம் பாராட்டி யது. எதியோப்பியா நாட்டு F அபீப் என்பவர்.இருமுறை மாரதான் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவர். இவர்களைப் போன்ற சரித்திரப் புகழ் வாய்ந்த மற்ற வீரர்கள் எல்லோரும் ஒரு நாளைக்குக் குறைந்து 15 மைலிலிருந்து 40 மைல் வரை ஒடிப் பழகினார்கள் என்பதை நாம் உணர்ந்து பின்பற்ற வேண்டும்.


பல ஒட்டப் பந்தயங்களில் பங்கு பெற வேண்டும், அதில் வரும் வெற்றியைப் பற்றியோ, தோல்வியைப் பற்றியோ களிப்படையவும் கூடாது. களைப்படையவும் கூடாது, ஒவ்வொரு போட்டியிலும் ஒடும் நேரம் குறைந்து வருகிறதா என்பதைக் கணக்கெடுத்து, மீண்டும் மீண்டும் குறைக்கின்ற முயற்சிகளைச் செய்ய வேண்டும்.இவ்வாறு எடுத்துக் கொள்கின்ற முயற்சியால் முழுத் திறமையும் முகில்விட்டு வெளி வருகின்ற முழு நிலவு போல் வெளி வரும். அப்பொழுது உயர்ந்த பயனும் கிடைக்கும். உலகமும் பாராட்டும்.


ஒடுகின்ற முறை :


வெற்றி பெற வேண்டும் என்ற வெறி கொண்டவர் களும், பந்தயம் பற்றிய விவரம் புரியாதவர்களும், பிறரை ஏமாற்றி அவர்கள் போட்டியில் ஏமாறக் கண்டு இன்பம் அடையும் ஒரு சிலரும் ஒட்டத் தொடக்கத்திலேயே