பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


தடையை இடித்துக் கொள்ளாத அளவுக்குத், தொடரும் காலை, மடிக்க வேண்டும்.அவ்வாறு மடிப்பது தொடைக்கும் கணுக்காலுக்கும் இடையில் செங்குத்தாக அதாவது 90 இருக்கும் அளவில் இருக்க வேண்டும். அவ்வாறு மடிந்து தடைக்கு மேலே வந்து இன்னும் மூன்று அல்லது நான்கு அங்குலம் உயர்த்தும்போது, நீண்டி ருக்கும் ‘முன் கால் தரை நோக்கி ஊன்றுவதற்காகத் தாழ்ந்துவிட உடலை முன் பக்கம் சாய்த்து, கைகளைப் பக்கவாட்டில் தாழ்த்த வேண்டும். இவ்வாறு தடையைத் தாண்டும் நேரத்தில் உடல் இயங்க வேண்டும்.


இவ்வாறு உயரமான தடையினை முதல் முறையாக தாண்டிய உடனேயே, மனதிலே உள்ள பயம், ஏதோ போன்ற ஒரு இனந்தெரியாத பரபரப்பு, பதைப்பு எல்லாம் அடங்கி விடும். அப்பொழுத உடல் எப்பொழுதும் போல இயல்பாக (Normal) இயங்கத் தொடங்கி விடும். அப் பொழுது உடல் நம் மனம் போல் இயங்கும். ஆகவே, உடலுக்கு உத்வேகம் ஊட்டி, ஒட்டத்தை விரைவு படுத்தி மீண்டும் ஒடத் தொடங்கி விடவேண்டும்.


உயரத் தாண்டுதல் (High Jump) போலவும், நீளத் தாண்டல் (Long lump) போலவும் தடையைத் தாண்டி னால் நேரம் வீணாகும். அதற்குள் மற்ற வீரர்கள் தங்கள் ஒட்டத்தையே முடித்து விடுவார்கள்.ஆகவே, தடைமீது தாவி நடத்தல் போன்ற புதிய முறையைக் (முன் விளங்கிய முறை) கற்றுக் கொள்ள வேண்டும். தற்காப்பிற்காக முதல் தடையை மட்டும் கொஞ்சம் உயரமாகத் தொடங்கி, மற்றத் தடைகளை அதிக உயரம் தாண்டாதவாறு சரியான அளவே தாண்டிச் சென்றால் தான், தங்குதடையில்லா