பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


பார்க்காமல் பின்னே திரும்பிப் பார்க்காமல் ஒடவேண்டும். இல்லையேல் கவனம் மாறி, தடையின் மீது மோதிக் கொள்ள நேரிடும். தவறி, தரையில் இடிபட்டு விழுந்து விடவோ, தவறாக, தாண்டிக் குதிக்கவோ நேர்ந்து, வெற்றி வாய்ப்பு வீணாகிவிடும்.


பத்தாவது தடையைத் தாண்டிய உடன், பாய்ந்து ஒடிவிட வேண்டும். ஏனென்றால், அந்த 15 கெஜங் களில் தான் வெற்றி தோல்வியே நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகவே விரைவோட்டம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை மனதில் கொள்க.


இதற்கான பயிற்சி முறைகளை எவ்வாறு பழக வேண்டும்?


மனம் போல் உடல் உறுப்புக்கள் அனைத்தும் வளைந்தும் நெகிழ்ந்தும் கொடுத்தால் தான் இயல்பாக தடைகளைத் தாண்ட முடியும். எனவே அடுத்து வரும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யவும்.


கீழே உட்கார்ந்து ஒரு காலை விறைப்பாக நீட்டி, மறுகாலை நேர்க்கோணத்தில் மடக்கி, முட்டியை மடக் காமல் கைகளால் மாறி மாறி நீட்டிய காலின் கட்டை விரலைத் தொடும் பயிற்சியைச் செய்க.


இரு கால்களையும் சேர்த்து விறைப்பாக நின்று, முட்டியை மடக்காமல் பாதங்கள் இரண்டையும் கைகளால் தொடும்படி குனிந்தும், முகம் முழங்காலில் படும்படியாக வளைந்தும் பயிற்சி செய்க.


குறைந்த உயரமுள்ள தடை (Hurdle) ஒன்றின் மேல் தாண்டுவதற்கு முன்னால் போகும் காலான முன் காலை வைத்து, மறுகால் பாதம் குதிகால் இரண்டும் தரையில்