பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


ஊன்றியிருக்க நின்று, நீண்ட முன் காலின் கட்டை விரலைக் - குனிந்து இரு கைகளாலும் மாறி மாறித் தொடுதல்.


உயர்ந்த தடை ஒன்றின் மேல் பின் காலைத் துக்கி மடக்கி வைத்து, முன் காலாகும் மறு காலை தடையின் பக்கவாட்டில் வைப்பதுபோல் நின்று, பின் நிற்கும் காலில் பாதத்தைத் தொடுவது போல் குனிந்து தொடுவது.


தடையைத் தாண்டிய பிறகு வரும் முன்காலை பாதமும் குதிகாலும் சேர்ந்தவாறு தரையில் ஊன்ற வேண்டும். உடலை முன்னாலே சாய்த்துக் கொள்ளவும் அதே நேரத்தில் இரண்டு கைகளையும் முன்னுக்குக் கொண்டு வருவதும் போன்ற திறன் நுணுக்கத்தைத் தவறின்றி பழகிக் கொள்க.


தொடரும் பின் காலை நேர்க்கோணத்தில் தடைக்கு மேலே மடித்து பின் தடையின் பக்கவாட்டில் கடக்க முயல்வது போல தாண்டிப் பழகுக. இதற்கு இடுப்பின் தடைபடா இயல்பான நெகிழ்ச்சி (Flexibility) அதிகம் வேண்டும். ஆகவே இம்முறைகளுக்கானப் பயிற்சிகளைச் செய்க.


இந்தத் திறன்களுடன், விரை வோட்டக்காரர்கள் செய்கின்ற பயிற்சிகளையும் ஒட்டத் தொடக்கத்திற்காக ஒட உதவும் சாதனத்தின் மூலம் அதற்குரிய முறைகளையும் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் 1948ல் 10 மீட்டர் தடை தாண்டி ஒட்டத்தில் ஒட வாய்ப்பிழந்த ஹேரிசன் தில்லார்டு என்பவர் 1948ம் ஆண்டு 100 மீட்டர் விரைவோட்டத்தில் 103 வினாடியில் ஒடிதங்கப் பதக்கம் பெற்றார். ஹேரிசன் தில்லார்டு மீண்டும் 1952ம் ஆண்டு