பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 DI நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


மேல் உயரம் உள்ளவர்களாதலால், அகலமான ‘காலடி’ விழுகிறது.நம்மவர்க்கு உயரம் குறைவாக இருப்பதால், 18 அல்லது 19 காலடி கொண்டு, பழகிக் கொள்ளலாம். இல்லையேல் முடிந்த வரை அவர்களைப் போலவே முயற்சியும் செய்யலாம்.


10 மீட்டர் தடைதாண்டி ஒட்டத்தைப் போலவே, அவ்வளவு தெளிவான, நுண்ணிய திறன்கள் இல்லா விட்டாலும், 3 அடி உயரத்தை விரைவாகத் தாண்டவும், பிறகு விரைந்து மறுபுறம் காலூன்றி, மறு தடையை விரைந்து அணுகி, வேகமாகத் தாண்டி ஒடவுமான ஆற்றல் அதிகம் உள்ளவரே எளிதாக வெற்றி பெற முடியும்.


இதுவும் விரைவோட்டம் போலவே ஒடப் பெறுவ தால், விரைவோட்டக்காரர்களுக்கே வெற்றி பெற அதிக வாய்ப்புண்டு. 800 மீட்டர் ஒட்டத்திற்கான நெஞ்சுரமும், உடல் திறனும் இதற்குத் தேவை.


பயிற்சி முறை : விரைவான ஒட்டம், தாண்டுகின்ற லாவகம், மனதிலே தைரியம், இவை மூன்றும் மிகமிக அவசியம்.


விரைவான ஒட்டத்திற்கு, 100மீ. 200மீ, 400மீ. 800மீட்டர் தூரங்களைப் பல முறை வேகமாக ஒடிப்பழக வேண்டும். விரைவோட்டக்காரர்கள் செய்கின்ற அத் தனைப் பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.


மனதிலே தைரியம் வருவதற்கு கீழ்க் காணும் முறையைப் பின்பற்றுக.போட்டிகளுக்குப் பயன்படுகின்ற உலோகத்தாலும் மரத்தாலும் ஆனத் தடைகளை முதலில் தாண்டிப் பழகினால், முழங்காலிலோ கணுக்காலிலோ இடித்துக் கொள்ள நேரிடும். ஒருமுறை அடிபட்டுக்