பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 83


கொண்டால், மறுமுறை தாண்டப் போகும் பொழுது


அச்சமாகவும் கூச்சமாகவும் இருக்கும்.


ஆகவே, அந்த மாதிரித் தடைகளுக்குப் பதிலாக குச்சியால் அவ்வளவு உயரத்திற்கு அமைத்துக் கொண்டு, அதில் பழக வேண்டும்.அதில் அடிபட்டாலும் வலிக்காது. அந்த அளவு உயரத்திற்கு ஏற்றார் போல் சரியாகத் தாண்டப் பழகிய பிறகு, முறையானத் தடைக்குச் செல்லலாம். இதனால் பயம் மறையும் ஊக்கம் நிறையும்.


தடையைத் தாண்ட ஒடி வரும் போது வேகமாக வாவும்; அதற்கு முன்னரே சரியான வேகத்தினால் ‘காலடி"களைக் குறைக்காமல், சற்று நிலைப்படுத்தி, தடையைத் தாண்டுவது ஒன்றையே மனதில் நினைந்து, கண்ணுங் கருத்துமாக இருந்து தாண்ட வேண்டும். இதே முறையை ஒரு தடையையே பயன்படுத்தி பல தடவைத் தாண்டிப் பழகுக.


இவ்வோட்டம் மிகவும் கடினமான ஒன்றாதலால் போட்டிக்கு முன் மனம் தளர்வதோ, சோர்வடைவதோ இல்லாமல் தைரியமாய் இருக்க வேணடும். அந்தத் தைரியம் வர, அதிகப் பாடுபட்டு பயிற்சி செய்ய வேண்டும். போட்டிக்கு முன்னால் மட்டும் பயிற்சி செய்து பய வில்லை.


ஆண்டு முழுவதுமே, போட்டிக்கான தயாரிப்பிலே, ல் பக்குவ நிலையில் இருக்க வேண்டும்.


ஆகவே, கூடைப்பந்தாட்டம், டென்னிஸ் போன்ற ஆட்டங்களைத் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கலாம். போட்டி இல்லாத காலங்களில்கூட, உடலைப் பக்குவ மான நிலையில் வைத்திருக்கவும், மற்றும், ஒலிம்பிக்