பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இருந்தாலும் பரவாயில்லை. அவரை அந்த இடத்தில் ஒடச் செய்தால், கொஞ்சம் பின் தங்கினாலும் மற்ற இருவரும் சமாளித்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஆகவே, சாதாரண ஒட்டக்காரை அங்கே ஒடச்செய்யலாம்.ஆனால் அவர் வளைவுகளில் சாமர்த்தியமாக ஒடக் கூடியவராக இருந்தால் நல்லது.


மூன்றாவது ஒட்டக்காரர், இரண்டாவது ஒட்டக் காரரை விட ஒடும் ஆற்றல் உள்ளவராகவும், வளைவு களில் நன்கு ஒடத் தெரிந்தவராகவும், இரண்டாவது ஆள் பின்தங்கினாலும் சமாளித்துக் கொண்டு முன்னுக்கு ஒடி வருபவராகவும் இருக்கவேண்டும்.


நான்காவது ஆள், கடைசிவரை முயற்சியை விடாது, மனம் தளராது போராடும் பேராற்றல் மிக்கக் குணம் படைத்தவராகவும், சிறந்த வேகத்தோடு ஒடக் கூடியவ ராகவும், இருக்கவேண்டும்.இவர் முயற்சியால் குழுவெற்றி


பெறும் வாய்ப்பு நிறைய உண்டு.


இவ்வாறு ஆராய்ந்து, ஒருமுறை குழுவை உருவாக்கி, ‘ஒடும் வரிசையைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அமைப்பும் சரியாக இருந்துவிட்டால் அப்படியே பழகவேண்டும். பிறகு மாற்றவே கூடாது.


இனி குறுந்தடியை மாற்றுகின்ற முறையைப் பற்றிக் கவனிப்போம்.


1. பாராமல் வாங்கும் முறை: குறுந்தடியுடன் ஒடி வருபவர். ‘தருபவராகவும் தனக்குரிய இடத்தில் நின்று கொண்டிருப்பவர் “பெறுபவராகவும்”மாறுகிறார்.


முதலாவது ஒட்டக்காரர் (First Runner)தொடங்கும் கோட்டில் விரைவோட்டக்காரர் தயார்” (Set) நிலையில்