பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இவ்வாறு, மாற்றிக் கொள்ளுகின்ற பரப்பளவு, நிற்கும் இடத்திற்கு முன்பாக 10 மீட்டரும், பின்பாக 10 மீட்டரும் உண்டு; மொத்தம் 20 மீட்டர் நீளம் உண்டு. இந்த எல்லைக்குள்ளே தான் ‘மாற்றம் நிகழவேண்டும். மீறிப் போனால் வெற்றி பெறும் தகுதியை (disqualify) இழந்துவிடும் அக்குழு.


ஒடிவருபவரின் குறிப்பு, கவனம், அக்கறையெல்லாம் பெறுதற்காக நின்று ஒடத் தொடங்கும் இரண்டாமவரின் விரிந்து குவிந்த கையில்தான் இருக்க வேண்டும். அவர் கெட்டியாக இறுகப் பிடித்துக் கொள்ளுமாறு அழுத்திக் கொடுத்து, அவர் உறுதிகயாகப் பற்றியிருக்கிறார் என் பதை உணர்ந்த பிறகே தடியின் தொடர்பை நீக்கி, அவரது வலது கைப்புறமாகவே, அதே ஒடும் பாதைக்குள்ளே தான் ஒடி நிற்கவேண்டும். அதனால் அவருக்கோ மற்ற ஒட்டக்காரர்களுக்கோ இடையூறு நேராமல் இருக்கு மாறு ஒடி நிற்க வேண்டும்.


முதலாமவர் வருவதற்குள், இரண்டாமவர் வேக மாக ஒடத் தொடங்கிவிட்டால், மாற்றுப் பகுதிக்குள்ளே ‘தடியை மாற்ற முடியாமல் போகும். அதைத் தவிர்க்க, அருகில் வந்ததும் “ஒடு” என்று சொல்லிய பிறகு, தரலாம். ஒடத் தாமதமாகி விட்டாலும்கூட, முன்னாலே வேகமாக ஒடச் செய்து தடியை கைமாற்றித் தரலாம்.


இருவரும் தங்கள் உச்சக்கட்ட ஒட்ட வேகத்தில் (Maximum Speed) மாற்றிக் கொள்வதுதான் தலைசிறந்த மாற்றுதலாகும். அவ்வாறு சரியாக நிகழ்வது மாற்றுப் பகுதியில் 14 அல்லது 15 மீட்டரில்தான் நிகழ முடியும். அதையும் பழக்கத்தினால் எளிதாகப் பெற்றுவிட முடியும் அந்தப் பயிற்சியை, எந்த இடத்தில் மாற்றிக் கொள்ள