பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


தோடு, அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று ஆடாமல் அசையாமல், ஒரே இடத்தில் நிலையாக இருப்பதுபோல் நீண்டிருக்க வேண்டும். தடிதன் கையில்பட்ட உடனேயே, விடாப்பிடியாக உறுதியாகப் பிடித்துக் கொள்ள விரல்களை உடனே மூடிக்கொள்ள வேண்டும். அப் பொழுது தான் குறுந்தடி மாற்றுதலில் தவறு நேர வாய்ப்பு இருக்காது.


இந்த மறைமுக முறையிலும் இன்னொரு முறை யாகப் பெறலாம் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர். பின்பற்றவும் செய்கின்றனர்.


குறுந்தடியை வலது கைக்கும் இடது கைக்கும் மாற்றிக் கொண்டிருக்கும் செயல், நேரத்தை வீணடிப்ப தோடு, தடி கீழே விழும் வாய்ப்பை உண்டு பண்ணுகிறது. ஒடும் வேகத்தையும் தடுக்க ஏதுவாகிறது என்று எதிர்க் கின்றனர்.


அவர்கள் கூறும் வழி-முதலாம் ஒட்டக்காரர் வலது கையில் தடியை வைத்தபடியே ஒட்டத்தைத் தொடங்கி ஒடி வந்து இரண்டாம் ஒட்டக்கார் இடது கையில் கொடுக்க, இரண்டாம் ஒட்டக்காரர் ஓடிப்போய் மூன் றாம் ஒட்டக்காரர் வலது கையில் கொடுக்க; மூன்றாம் ஒட்டக்காரர் ஒடிப்போய் நான்காம் ஒட்டக்காரர் இடது கையில் கொடுப்பார். அவர் இடது கையில் வைத்திருந்த படியே, ஒட்டத்தை ஒடி முடிப்பார்.


இதிலென்னபயன் உண்டு என்றும் கேட்கலாம்.200 மீட்டர் பந்தயப்பாதை இருந்தால் எல்லோரும் வளை வில் தான் ஒடவேண்டியிருக்கும். 400 மீட்டர் பந்தயப் பாதை இருந்தால் பெரிய அளவில் நடக்கும் போட்டி களில்தான் உண்டு. அதில் முதலாமவரும் மூன்றாவது