பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 93


வாங்க ஏமாந்து கோட்டை விடாமலும் கவனிப்புடன் இருக்க வேண்டும். தவறு நேர்ந்தால் எதிரே வருகின்ற, குறுந்தடி நெஞ்சைக் குத்தினாலும் குத்திவிடும்.


இந்த முறை, பள்ளிப் போட்டிகளில் மட்டுமே கையாளப்படுகிறது.


மேலே கூறிய இரண்டுமுறைகளில் உள்ள நிலையை, தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள விரும்புவோர், குழுவாக இணைந்து, ஒடும் வரிசையை வகுத்துக் கொண்டு இடைவிடாத பயிற்சியில் ஈடுபடவேண்டும்.சேர்ந்து ஒடிப் பழகும் நடுத்தர ஒட்டக்காரர்கள், சிறந்த ஒட்டக்காரக் குழுவையும் வெற்றி கொள்ள முடியும் என்பது சரித்திரம் காட்டும் உண்மை என்பதால், சேர்ந்து பயில்க சேர்ந்து செயல்படுக.


தவறு எங்கு நிகழும், எங்கு நிகழ வாய்ப்பிருக்கிறது என்று அனுபவம் கூறுகிறதோ, எப்படி நிகழும் என்று பயிற்சி ஆசிரியர் கூறுகிறாரோ. அந்தத் தவறினைத் தவிர்க்க, பலமுறைப் பழகி, சிறப்புற வளர்த்துக்கொள்ள வேண்டும், குறுந்தடியை மாற்றுவதில் தவறே நிகழாமல் காத்துக் கொள்கின்ற தலையாய கடமையுடன், விரை வோட்டமும் தேவை என்பதை மறந்துவிடக்கூடாது.


ஒடிமுடிக்கும் ஒட்டக்காரர்களுக்கு ஒரு சிறு குறிப்பு. முதலாவதாக ஒடிக்கொண்டிருந்தால், அந்த தூரத்தை கடைசிவரையிலும் கடைப்பிடித்து நிலைநாட்டி ஒடி முடிக்க வேண்டும். முதலில் வர வாய்ப்புக் குறைந்து, கொஞ்சம் பின் தங்க நேர்ந்தால், ஒட்ட முடிவை நெருங் கும் பொழுது, முழுபலத்தையும் உபயோகித்து, இடை வெளியைக் குறைக்க முயல வேண்டும். அப்படி ஓடினால் முன்னே போகும் குழுவுக்கு மனதில் குழப்பம் ஏற்பட வழி யுண்டு முயற்சி உள்ள குழு வெற்றி பெறவும் வாய்ப்புண்டு.