பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

101


மயக்க நிலை’ என்கிறார்கள். ஏன் உறக்கம் வருகிறது என்பதற்குப் பலர் பல்வேறுவிதமான காரணங்கள் கூறுகின்றார்கள்.

மூளைக்கு இரத்தம் செல்வது குறையும் பொழுது அல்லது முக்கியமான மூளைப் பகுதிக்குள் இரத்தம் செல்வது குறையும் பொழுது இந்த மாதிரி உறக்க நிலை உந்தப்படுகிறது என்ற ஒரு பழங்கால கருத்து உண்டு.

பலவிதமான கழிவுப் பொருட்கள் உடலில் தேங்கி ஒருகளைப்பு நிலையை மூளைக்குச் செல்லும் நரம்பு செல்களுக்கு உண்டுபண்ணி விடுவதால், இதுபோல் உறக்கம் வருகிறது என்கிறது நவீன காலக் குறிப்பொன்று.

எப்படியிருந்தாலும், தூக்கம் என்பது தெய்வம் தந்திருக்கின்ற வரப்பிரசாதமாகும். ஏனெனில், தூக்கம் வராமல் தொல்லைப் படுகின்றவர்களை போய்க் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் என்னென்னமோ வழிகளையெல்லாம் பின்பற்றிப் பார்க்கின்றார்கள். தூக்கத்தைப் பெற துரத்திப் பிடிக்கின்றார்கள்.

தூக்கம் அவ்வளவு முக்கியம் வாழ்க்கைக்கு, ஏனெனில் பகலில் படுபயங்கரமாக உழைத்த நரம்பு மண்டலங்கள். பணியின் பளு குறைந்து உறக்கத்தில் விடுதலை பெறுகின்றன. தசைகள் தளர்ச்சியுடன் ஓய்வு பெறுகின்றன. சுவாசத்தின் வேகம் குறைகிறது. இழந்துபோன சக்தி, தூக்கத்தில் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

இதனால்தான், உறங்க வேண்டும். உறக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்கிறார்கள்.