பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அதனால் என்ன நன்மை என்று கேட்கலாம்.

தூய பிராணவாயுவைத் தேடித்தான் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் திரிகின்றன. ஆகர்ஷித்துக் கொள்கின்றன. அதனால் அவை வேகம் பெறுகின்றன. அந்த வேகத்தினால் இரத்த ஓட்டமும் வேகம் பெற்று விரைவாக ஓடத் தொடங்குகிறது.

உடல் முழுதும் இரத்த ஓட்டம் ஓடி முடிக்க 23 வினாடிகள் ஆகின்றது என்றால் நல்ல உடற் பயிற்சி செய்பவருடைய உடலில் இரத்த ஓட்டம் 12 வினாடிகளில் நடைபெறுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படித்தான் இரத்த ஓட்டம் உடல் முழுவதும் ஓடி உடலைச் செழுமைப் படுத்துகிறது.

எப்படி? இரத்த ஓட்டம் உணவுக் குடலிலிருந்து உணவினை உடல் உறுப்புகள் அனைத்துக்கும் எடுத்துச் செல்கிறது. இரத்த அணுக்கள் பிராணவாயுவை நுரையீரலிலிருந்து உடல் முழுதுக்கும் எடுத்துச் செல்கின்றன. உறுப்புக்கள் வேலை செய்வதால், அங்கு உண்டாகும் கரியமிலவாயு, லேக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களையெல்லாம் விரைவாக வெளியேற்றிட இரத்த ஓட்டம் உதவுகிறது.

செல்களிலிருந்து தூய்மையிழந்த காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்வது மட்டுமின்றி, மற்ற கழிவுப் பொருட்களையும் கல்லீரலுக்கும் சிறுநீர்ப் பைக்கும் அதிவிரைவாகக் கொண்டு செல்கிறது.

அத்துடன் ‘நில்லாமல், இரத்த ஓட்டம் உடலில் வெப்ப தட்பத் தன்மையையும் சீராக்கி வைக்கிறது. குளிர்ந்த உடல் பகுதிக்கு வெப்பத்தையும் கொண்டு செல்கிறது. இவ்வாறு இரத்த ஓட்டத்தின் வேலையை