பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இதயத்தைத் தந்து இன்பகரமாக வாழ்வை ஏற்றி வைக்கிறது எது? உடற்பயிற்சிதான்.

உடற்பயிற்சிதான் ஒருவருக்கு உற்ற துணைவன். உண்மையான வழிகாட்டி, ஒப்பற்ற ஆசான்.

நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்று நூல்கள் எழுதியவர்களில் பலர் அரை நூற்றாண்டுடன் தங்கள் ஆயுட்காலத்தை முடித்துக்கொண்டு போய் விட்டனர். ஆனால், நம்மிடையே அண்மைக் காலத்தில், சொல்லாமல் செய்துகாட்டிய, அதாவது 101 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ஒரு பொறியியல் மேதை விஸ்வேஸ்வரய்யா என்பவர் கூறிய பொன் மொழியை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.

“Your health lies 10 miles away.
You have to Walk daily and pickit up there”

உங்களது ஆரோக்கியம் 16 கி.மீ.களுக்கு அப்பால் இருக்கிறது. நீங்கள் தினம் நடந்து போய் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

மற்றவர்களை அனுப்பிப் பெற்றுக் கொள்வதுதான் நம்மவர்களின் இயல்பு. அதாவது இக்கால நாகரிக மக்களின் நடைமுறை. தமது உடல் நலத்திற்காக ஒரு வைத்தியரை அமர்த்திக் கொண்டு, அவருக்கு நல்ல சம்பளம் தந்து, தமக்காக அவரைக் கவலைப்படும்படி செய்து, மருந்தையும் ஊசியையும் நம்பி வாழ்பவர்கள் ஆயிற்றே நம் காலத்தவர்.

அதை நடைமுறையில் பின்பற்றாமல், நீங்களே போய் உங்கள் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்று அவர் கூறியதிலிருந்து, 101 வயது வரை ஆரோக்கிய-