பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

109


மாக வாழ்ந்து அரும்பணிகளை ஆற்றிய அவர், அப்படித்தான் தினம் பெற்று திவ்யமாக வாழ்ந்திருந்தார் போலும்.

இத்தகைய அரிய அபூர்வமான உண்மையை, அனுபவத்தால் உணர்ந்து. அதிசயமாக வாழ்ந்து காட்டியிருக்கின்றார். என்னே நடையின் பெருமை!

‘நலமாக வாழ வேண்டும் என்றால். மெதுவாக ஓடுங்கள். நீண்டநாள் வாழ விரும்புகிறவர்கள் வேகமாக ஓடுங்கள்’ என்பது ஒரு மேல் நாட்டுப் பழமொழி.

நடையில், வேக நடையும். மெதுவான ஓட்டமும், மிக வேகமான ஓட்டமும் ஓர் ஒப்பற்ற பயிற்சியே! உடல் உறுப்புக்களை உன்னதமாக இயக்கும் பயிற்சியே! உடலை இயக்குவதன் மூலம், உயிர்க்காற்றை நிறைய நுரையீரலுக்கு அனுப்பி இரத்தத்தைத் தூய்மைப்படுத்தி, செல்களை, திசுக்களை, தசைகளை, எலும்புகளை வளமுடையதாக மாற்றிவிடுகின்றது.

ஆகவேதான், உடலை இயக்கும் ஒப்பற்றபணியில், தினம் சிறிது நேரமாவது ஈடுபடுங்கள். உறுப்புக்களை ஈடுபடுத்துங்கள் என்கிறார்கள் அனுபவசாலிகள்.

வசதியுள்ளவர்கள் நடக்கலாம், மெதுவாக ஓடலாம் வாய்ப்புள்ளவர்கள் விரும்பிய விளையாட்டுகளில் ஈடுபடலாம். ஆதலால், நோயில்லாமல் வாழும் தூய வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் நீங்கள், இதுவரை இத்தகைய பயிற்சிகளில் முயற்சி செய்யாமல் இருந்தால் இன்றே ஈடுபடுங்கள்.

நாளை என்று நினைவை, செயலை ஒத்திப் போட வேண்டாம். நல்ல காரியம் செய்வதற்கு நாள் பார்க்க வேண்டாம். நேரத்தை ஒதுக்க வேண்டாம். அதிலும்,