பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

11


2. நினைப்பும் தவிப்பும்

மெய் என்றால் உடல், மெய் நோய் என்றால் உடல் நோய். இதையே உண்மையான நோய் என்றும் கூறலாம். பொய் நோய் என்றால் நமக்கே என்னவென்று தெரியாத மனநோய். கண்ணுக்குத் தெரிகின்ற உடல் நோய், கண்டே பிடிக்கமுடியாத மனநோய். இந்த இரண்டிலும் மாட்டிக் கொண்டுதான், மனித இனமே திண்டாடிக் கொண்டிருக்கிறது.

‘மனிதன் நினைக்கிறான். இறைவன் அழிக்கிறான்’ என்பதற்கிணங்க, மனிதனது நினைப்பு எப்படியோ எழுகின்றது. அதன் கூடவே தவிப்பும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.

தவம் செய்து திவ்யமடைவதற்காக ஒரு முனிவர் காட்டுக்கு வந்துவிட்டார். உலக ஆசையையே ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஓர் முடிவுடன் வந்தவர் அவர். பிறந்தபோது, இருந்த மேனியுடனே வாழ்ந்துகொண்டு இருந்தார். காரணம், ‘கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை, கூடவருவதும் ஒன்றுமில்லை’ என்று கூறியவாறு, எல்லாவற்றையும் துறந்ததற்கு அடையாளம் அதுவே என்று எண்ணி, அவர் பிறந்த மேனியராகவே தவம்செய்து வாழ்ந்து வந்தார்.

ஆண்டுகள் பல கடந்தன. அரிய தவம் செய்யும் நேரத்தில் அவர் மனத்தில் ஓர் அற்பமான நினைப்பு. மற்ற முனிவர்களும் இருக்கின்றார்கள். மரவுரிதரித்தல்லவோ நடக்கின்றார்கள். நான் மட்டும் இப்படி ஏன் இருக்க