பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

13


குழந்தைகள் பிறந்தது. குடிசைக்குள் குதூகலத்தை நிரப்பிக் கொண்டிருந்தன. எல்லோரையும் காக்கின்ற பொறுப்பு இப்பொழுது, சாமியார் தலையில்தான் விழுந்தது.

ஒருநாள், அடுப்பிலிருந்து தெறித்து விழுந்த பொறியால் திடீரென்று குடிசை தீப்பிடித்துக் கொண்டது. அது காட்டுக்குள்ளே ‘காட்டுத் தீ’ போல பரவத் தொடங்கியது. தவம் செய்ய உட்கார்ந்த முனிவர் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என, வேகமாக ஓடத் தொடங்கினார். அவரது கால்களை யாரோ கட்டிப்பிடித்து இழுப்பது போலத் தோன்றவே, திரும்பிப் பார்த்தார். மாட்டுக்காரத் தம்பதிகள் ஆளுக்கொரு காலைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

‘எங்களைத் தவிக்க விட்டுவிட்டு எப்படி நீங்கள் மட்டும் ஓட முடியும்!’ ‘பிடியுங்கள் பிள்ளைகளை’ என்று இரண்டைத் தந்தார்கள். ஆளுக்கு இரண்டு என்றார்கள். ஆளுக்கு இரண்டு என்று அவர்கள் பிரித்துக் கொண்டது போக, மீதி இரண்டையும் தூக்கித் தோள்களில் வைத்துக் கொண்டு, சாமியார் ஓடினார். கோவணம் கட்ட ஆசைப்பட்டு, குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு குடும்பஸ்தன் போல ஓடுகின்றேனே என்று வேதனைப் பட்டாராம் அந்த முனிவர்.

அவர் நினைப்பு ஒன்று. நிகழ்ந்த தவிப்பு ஒன்று, அந்த நினைப்புதான் ஆசையாக வந்து மனிதனை பாடாய்ப்படுத்தி விடுகிறது. மனதிலே இது நோயாக மாறி வாட்டி வதைத்து விடுகிறது. இந்தப் பொய் நோய்கள் போடும் தூபம்தான் ஆசை. ‘ஆசைதான் அனைத்துக்கும்