பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

19


4. இழப்பும் பழிப்பும்


ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே!

என்கிறார் திருமூலர்.

கும்பகர்ணன் கதையை ஏற்கனவே படித்தோம். கடுந்தவம் செய்து என்ன பயன்? கடவுளைக் கண்டு என்ன பயன்? கொண்டிருந்த தனது கருத்தை ஒழுங்காகச் சொல்லத் தெரியாமல் உளறி காரியத்தைக் கெடுத்து விட்டானே!

அதனால்தான், எந்தக் காரியத்தையும் உணர்ச்சிவசப்படாமல் செய்ய வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள். குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வதுபோல, தனக்கு நன்மை தருகின்ற காரியங்களையே தனக்கெதிராக, பெரும் துன்பத்தை உண்டுபண்ணி விடுமாறு, ஒருசிலர் தாங்களே செய்து கொள்கின்றார்கள்.

இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், துன்பமும் வராது. துயரமும் நேராது. வந்தாலும் கரைக்கு வரும் அலைபோல, வந்து மோதிவிட்டு அதுவாகவே போய் விடும். அற்பத்தனமாக ஆசைப்பட்டு, ஆவேசத்துடன் எதையும் பெற முயற்சித்தால், மனநோயை மிகுதிப்படுத்திவிட்டு, மருகி உருகி வதைப்படச் செய்து விடுமேயன்றி, வேறு ஒரு மார்க்கத்தையும் தந்துவிடாது. இதோ இன்னொரு முனிவரின் கதையைக் கேளுங்கள்!

ஒரு முனிவருக்கு மனதிலே பெரிய குறை! தவம் செய்ய வந்தவருக்குத் தேவையில்லாத குறைதான். என்றாலும் அவரும் மனிதரல்லவா? பல ஆண்டுகள்