பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


காட்டிலே தவம் செய்கிறார். விரதம் இருக்கிறார். ஆனால், மற்ற முனிவர்களைப் போல முகத்திலே தாடி, மீசை, தலையிலே ஜடாமுடி அமையவில்லையே என்பதுதான் அந்தக்குறை. வெறுமனே இருப்பதால், எல்லோரும் தன்னை வெறுக்கின்றார்கள் என்று அவராகவே நினைத்துக் கொண்டு கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்.

வழக்கம்போல, தவம் பலிக்கிறது. கடவுள் எதிரே தோன்றுகிறார். கடவுளிடம் வரம் கேட்கிறார். முக்கியமான மிக வல்லமையுள்ள மூன்று வரங்களைக் கடவுளிடம் பெற்றுக் கொள்கிறார். அதாவது நினைத்ததை சாதிக்கும் சக்தி படைத்த வரங்கள். அத்தகைய வரங்கள் மூன்று கிடைத்தவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அடுத்த நொடியிலே, அவர் மனதிலே மாறாக் குறையாக இருந்த மனக்குறை முன்னே வந்து ஊஞ்சல் ஆடுகிறது.

தன்னை அரித்துக் கொண்டிருந்த கவலையின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட வேண்டும் என்ற வேகத்துடனும் வெறியுடனும் வரத்தைப் பயன்படுத்த முனைகிறார் முனிவர். தாடி, மீசை, ஜடாமுடி இதே நினைவில் இருந்ததால், அவருக்கு எப்படிக் கேட்க வேண்டும் வரத்தை என்பதும் நினைவுக்கு வரவில்லை. ‘எனக்கு முடி வேண்டும்’ என்று ஒரு வரம் கேட்கிறார். என்ன மாயம்?

அவர் மேனியெல்லாம் முடி மயம். கரடி போல ரோமக் கற்றைகள். கண், மூக்கு, வாய் எதுவுமே தெரியாமல் முகம் முழுவதும் முடியானது மண்டி