பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

21


விடுகிறது. முனிவருக்கு ஒன்றுமே புரியவில்லை. முடிதானே கேட்டோம். மேனி முழுவதும் வந்து விட்டதே! பார்க்க வேண்டும் என்றால் முடியை விலக்கித்தான் பார்க்க முடிகிறது. சாப்பிட வேண்டும் என்றால் முடியைத் தூக்கினால்தான் சாப்பிட முடிகிறது. என்ன செய்வது? அதனால் எரிச்சல்பட்ட முனிவர் இன்னொரு வரத்தை பிரயோகிக்கிறார். அதாவது இந்த முடி எனக்கு வேண்டவே வேண்டாம் என்று!

என்ன ஆச்சரியம்! அவர் உடலில் இருந்த முடியெல்லாம் போய் விட்டது. உடலில் முடி இல்லாமல் போனதும், உரித்த கோழிபோல, வெள்ளைப் பிசாசுபோல ஆகி விட்டார் முனிவர். தன் கோலத்தைக் கண்டதும் அவருக்கே வெட்கமாகவும் இருந்தது. வேதனையாகவும் இருந்தது.

இருந்த வரங்களில் இரண்டு போய் விட்டதே என்ற கவலைகூட அவருக்கு வரவில்லை. எப்படி கேட்டால் தான் அழகாகத் தோன்றலாம் என்று யோசிக்கத் தொடங்கினார் முனிவர். பிறகு கூறினார். மற்ற முனிவர்களுக்கு இருப்பது போல் ஜடாமுடி அமைய வேண்டும் என்கிறார். அதேபோல் ஜடாமுடி வந்ததும் அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆமாம்! மலையைக் குடைந்து ஒரு எலியைப் பிடித்த மேதாவி போல மகிழ்ச்சியடைந்தாராம் அந்த முனிவர்.

இந்த முனிவரைப்போல, எத்தனையோ பேர்கள் தன்னிடமுள்ள அரிய சக்தியை, திறமையை, அறிவின் பெருமையை அனாவசியமாக வீணடித்து விடுகின்றார்கள். சிலர் யாருக்குமே பயன்படாமலேயே வீணாகியும் போய் விடுகின்றார்கள். கடைசியிலே கிடைக்கின்ற சிறு