பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அளவு பயனை வைத்துக் கொண்டு சந்தோஷப்படவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகி வேதனையடைகின்றார்கள். வெதும்பிப் போகின்றார்கள்.

பொய் நோய்க்குப் பல தூதுவர்கள் உண்டு. அவர்கள் எம தூதுவர்களைவிட எமகாதகர்கள். ஏய்த்துச் சிக்கலில் மாட்டி விடுவதில் பெரும் சமர்த்தர்கள். கொஞ்சம் ஏமாந்தால் போதும். குழியைத் தாங்களே வெட்டிக் கொள்ளச் செய்து, படுத்து மண்ணைப் போட்டு மூடிக் கொள்ளவும் வைத்துவிடுவார்கள்.

பொய் நோயின் பிரதம சிஷ்யனாக விளங்குவது ஆசைதான். அந்த ஆசையோ தனக்குப் பாதந்தாங்கிகளாக அவசரம், ஆத்திரம், பொறாமை, தற்பெருமை, உணர்ச்சி வசப்படுதல், போன்றவைகளை அழைத்து வந்து, மனிதர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால், இன்பமாக வாழ வேண்டிய அனைவரும் ‘ஏதோ ஒன்று வேண்டும்’ என்று எண்ணியபடியே ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பார்களா?

‘இல்லாத பொருளுக்கு ஏங்கும், கையில் இருந்து விட்டால் படுத்துத் தூங்கும்’ என்ற மனதின் தன்மையை படம் பிடித்துக் காட்டுகிறார் ஒரு கவிஞர். இந்த மனத்திண்மை இல்லாததால்தான், பலர் மனதுக்கு அடிமையாகி வாழ்வின் இன்பத்தையே இழந்து நோய்வாய்ப்பட்டு, நொந்து நொறுங்கிவிட்டத் தகரம் போல காட்சியளிக்கின்றனர். இல்லையென்றால். அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் அப்படி ஆவாரா? அவரை அடுத்தப் பக்கத்தில் காண்போம்! வாருங்கள்!