பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

23


5. பழிப்பும் துடிப்பும்

அழகு நிலையத்தின் உரிமையாளர் ஆனந்தராஜ், அந்தக் கடைக்குள் இருக்கிறார் என்றார், அங்கே ஆரவாரச் சிரிப்பும் இருக்கும். கேலியும் கிண்டலும் வெடிக்கும். கூட இருப்பவர்களின் கும்மாளச் சிரிப்பும் கேட்கும். அதைக் கேட்டுக் கொண்டே அவர் அருகில் போய் பார்க்கலாம் என்று விரும்பிப் போனால், அவர் போட்டிருக்கும் மேல் நாட்டு செண்டின் மணம், மூக்கில் மிளகாய் நெடி ஏறுவதுபோல் ஏறி, நம்மை திக்குமுக்காடச் செய்தவாறு வரவேற்கும்.

நிலையத்தின் உள்ளே ஊதுபத்தி எப்பொழுதும் புகைந்து கொண்டேயிருக்கும். ஆங்காங்கே கண்ணாடி தூய்மையாகத் துடைக்கப்பட்டு, பார்க்கும் ஆட்களின் முகத்தைப் பளிச்சென காட்டிக் கொண்டிருக்கும். அவரோ தும்பை மலர்போல வேட்டி சட்டை அணிந்து கொண்டிருப்பார். அவரது வாய், ஏதாவது ஒரு சினிமா பாட்டை முனகிக் கொண்டேயிருக்கும்.

‘நீங்கள் மிகவும் அழகாயிருக்கிறீர்கள்’ என்று யாராவது சொல்லிவிட்டால், அவரது முகம் சிவந்து போய்விடும். நாணத்தால் அல்ல. தற்பெருமையால், சொல்லியவருக்கு டீ டிபன் உடனே கிடைத்துவிடும். தான் செய்கின்ற தொழிலைத் தெய்வம் போல நினைப்பவர் அவர்.

‘பறவைகள் விதைப்பதுமில்லை. அறுக்கிறதுமில்லை. அவற்றை ஆண்டவனே காப்பாற்றுகிறார்.