பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மனிதன் ஏன் இப்படி பணத்திற்காகப் பேயாய் அலைகிறான்’ என்று ஒரு போர்டு எழுதித் தொங்கவிட்டிருந்தார். இது ஏன் என்று கேட்டால், ‘இதுவே என் வாழ்வின் வழிமுறை’ என்பார். கூடவருவது பாவ புண்ணியம்தான். உடலில் ஒன்றுமில்லாமல் உலகில் பிறந்தோம். போகும்போதும் அப்படித்தான்’ என்பார்.

சிங்காரமான பேச்சுக்குள்ளே சிருங்காரம் எதிரொலிக்கும். அன்றாடம் வருகின்ற வருமானத்தை அப்படியே செலவு செய்வதும், மீதியானால் பெட்டியில் வைப்பதுமாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். ‘இன்றைக்கு நன்றாக வாழ்வோமே’ என்பதுதான் அவரது சித்தாந்தம். தினம் வருகிற ஐந்து அல்லது பத்து ரூபாயில் அவரது பொழுது ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்தது. அவரது மனைவியும், அவரது போக்கைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. இருவரும் கவலையே இல்லாமல் ஆனந்த ராஜாவாக, அவரது அழகு நிலையத்தை ஆனந்தக் கோட்டையாக்கி ஆட்சி புரிந்து வந்தனர்.

அன்றும் அப்படித்தான் அழகு நிலையம் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஆனந்தராஜ் கத்தியும் கையுமாக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு முதியவர் உள்ளே நுழைந்தார். அந்தக் கடையின் வாடிக்கையாளர்தான். ஆனால் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறைதான் வருவார். அடிக்கடி வந்தால் காசு செலவாகிவிடுமே! அடிக்கடி வந்தாலும், முடி வளராமலா நின்றுவிடும்! அதற்கு ஏன் போய் வீணாக காசை செலவழிக்க வேண்டும் என்பது அவரது கொள்கை!